உள்ளடக்கத்துக்குச் செல்

கலித்தாழிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலித்தாழிசை தமிழ் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் அமையும். ஈற்றடி மட்டும் சற்று நீண்டு அமையும்; ஏனைய அடிகள் தம்முள் அளவு ஒத்து வரும்; ஒவ்வாதும் வரும். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும், சில இடங்களில் இது தனித்தும் வரும்.


எடுத்துக்காட்டு 1

கொய்தினை காத்தும் குளவி அடுக்கத்தெம்
பொய்தல் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

ஆய்தினை காத்தும் அருவி அடுக்கத்தெம்
மாசில் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

மென்தினை காத்தும் மிகுபூங் கமழ்சோலைக்
குன்றச் சிறுகுடி வாரல்நீ ஐய நலம்வேண்டின்

மூன்றடுக்கி வரும் கலித்தாழிசை - (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)
எடுத்துக்காட்டு 2

வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்
கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்திங்காள்
கேள்வரும் போழ்தில் எழாலாய்க் குறாலியரோ
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்

தனித்து வரும் கலித்தாழிசை - (யாப்பருங்கலக் காரிகை உரைமேற்கோள்)


உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலித்தாழிசை&oldid=967021" இலிருந்து மீள்விக்கப்பட்டது