கர்ணகூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விமானங்களின் ஹாரத்தின் ஓரத்தில் இடம்பெறும் உறுப்பு கர்ணகூடம். கர்ணம் என்றால் காது. விமானத்தையே முகமாக நினைத்தால் காதுகளைப் போல நீட்டி நிற்பவை கர்ணகூடங்கள். ஒருவிமானத்தின் தளத்தை எண்ண வேண்டுமானால் ஒவ்வொரு தளத்திற்கு ஒரு கர்ணகூடமாக எண்ணி எண்ணிக்கையில் ஒன்றைச் சேர்த்தால் போதும். வேதிகை, கண்டம், ப்ரஸ்தரம், க்ரீவா, சிகரம், ஸ்தூபி என்று ஆறங்கங்களோடு அமையும் கர்ணகூடம் கர்ணதேவதைகளோடும் அமையலாம். கர்ணகூடத்தை சதுரச்ரமாக - நாற்பட்டையாக, அஷ்டாச்ரமாக - எண்பட்டையாக, ஷோடசாச்ரமாக - பதினாறுபட்டையாக, வர்த்துலமாக - வட்டமாகவும் அமைக்கலாம். ஹாரத்தைப் பகுதியாக வகுக்கும்போது 1-1 பகுதியாக அமையும் கர்ணகூடம் பலவிதமான அணியுறுப்புக்களோடும் அமையும். பொதுவாக நான்கு மூலைகளிலும் அமையும் கர்ணகூடம் கஜப்ருஷ்டத்தில் மட்டும் இரு முகப்புகளில் மட்டும் அமையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணகூடம்&oldid=2076313" இலிருந்து மீள்விக்கப்பட்டது