உள்ளடக்கத்துக்குச் செல்

கர்டியசு மறுசீராக்கல் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்டியசு மறுசீராக்கல் வினை அல்லது கர்டியசு வினை அல்லது கர்டியசு சிதைத்தல் வினை ( Curtius rearrangement ) முதன் முதலில் தியோடர் கர்டியசால் வரையறுக்கப்பட்டது. ஓர் அசைல் அசைட்டு சமசயனேட்டாக மறுசீராக்கம் அடையும் வேதிவினையே கர்டியசு மறுசீராக்கல் வினை எனப்படுகிறது [1][2][3][4]. இவ்வினை தொடர்பாக பல விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

The Curtius rearrangement

சமசயனேட்டுகள் பல்வேறு மின்னணுமிகு பொருட்களால் கவரப்படுகின்றன. சமசயனேட்டை ஓர் அமீனாக மாற்ற பெரும்பாலும் தண்ணீர் சேர்க்கப்படுகிறது[5] . இவ்வினையை ஒர் மூவிணைய பியூட்டனால் முன்னிலையில் செய்யும் போது, கரிமவேதியியல் தொகுப்பு வினைகளில் பயன்படும் இடைநிலைகளான மூவிணைய பியூட்டைலாக்சிகார்பனைல் பாதுகாக்கப்பட்ட அமீன்கள் உருவாக்குகிறது[6][7].

இருபீனைல்பாசுபோரைலசைட்டு பயன்படுத்தி காபொட்சிலிக்கமிலங்களை அசைல் அசைட்டுகளாக எளிதாக மாற்றலாம்[8][9][10]

Using DPPA to convert an acid to a BOC-protected amine.

இவ்வாறே பென்சைல் ஆல்ககால் முன்னிலையில் கர்டியசு வினையை நிகழ்த்தினால் கார்பாக்சிபென்சைல் பாதுகாக்கப்பட்ட அமீன்கள் உருவாகின்றன[11].

வினை வழிமுறை[தொகு]

கர்டியசு மறுசீராக்கல் வினை இரண்டு படிநிலைகளில் நிகழ்வதாக நம்பப்படுகிறது. நைட்ரசன் வாயுவை இழந்து அசைல்நைட்ரீன் உருவாவது முதல் படிநிலையில் நிகழ்கிறது. இரண்டாவது படிநிலையில் அசைல் நைட்ரீன்களில் உள்ள ஆல்கைல் தொகுதிகள் இடபெயர்ச்சியாவதன் மூலமாக மறுசீரமைப்பு அடைந்து தேவையான சமசயனேட்டு உருவாகிறது. இருப்பினும் இவ்விரு படிநிலைகளும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன என்று நடைமுறையில் கிடைத்துள்ள சான்றுகள் குறிப்பிடுகின்றன. தனிநிலை நைட்ரீன் இடைநிலைகள் எதுவும் இங்கு உருவாவதில்லை[12]

The mechanism of the Curtius rearrangement

வீச்செல்லை[தொகு]

α-சயனோஎசுத்தரை ஓர் அமினோஅமிலமாக மாற்றும் செயலில் கர்டியசு மறுசீராக்கல் வினையின் ஒரு படிநிலை நிகழ்கிறது. இம்மாறுபட்ட வேதிவினை தாராசுகை சிதைத்தல் வினை எனப்படுகிறது[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. Curtius, T. (1890). Ber. 23: 3023. 
 2. எஆசு:10.1002/prac.18940500125
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 3. Smith, P. A. S. (1946). Org. React. 3: 337–449. 
 4. எஆசு:10.1021/cr00084a001
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 5. Kaiser, C.; Weinstock, J. (1988). "Amines from mixed carboxylic-carbonic anhydrides: 1-phenylcyclopentylamine". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0910. ; Collective Volume, vol. 6, p. 910
 6. எஆசு:10.1021/op970115w
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 7. எஆசு:10.1021/ol051428b
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 8. Shioiri, T.; Yamada, S. (1990). "Diphenyl phosphorazidate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv7p0206. ; Collective Volume, vol. 7, p. 206
 9. எஆசு:10.1021/ja00772a052
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 10. எஆசு:10.1016/S0040-4020(01)97352-1
  This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand
 11. Jessup, P. J.; Petty, C. B.; Roos, J.; Overman, L. E. (1988). "1-N-Acylamino-1,3-dienes from 2,4-pentadienoic acids by the Curtius rearrangement: benzyl trans-1,3-butadiene-1-carbamate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0095. ; Collective Volume, vol. 6, p. 95
 12. Smith, Michael B.; March, Jerry (2007). March's Advanced Organic Chemistry (6th ed.). Hoboken, New Jersey: Wiley. p. 1609. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-72091-1.
 13. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-02. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.

இவற்றையும் காண்க[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]