கருநிற வளையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்குழியைச் சுற்றியுள்ள கருநிற வளையங்கள்
Periorbital dark circles
Dark circles (cropped).png

கருவளையங்கள் (dark circles, அல்லது periorbital dark circles) என்பது கண்களைச் சுற்றி காணப்படும் கருநிறக் கறைகள் ஆகும்.[1] இதற்கு பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன. இந்த சாம்பல் நிறம் போன்ற கருநிற வளையங்கள் அதிகப்படியான வயதுத் தோற்றம் கொண்டதுபோல் தோன்றச் செய்யும். அது தவிர கருநிற வளையங்கள் கண்களுக்கு கீழ் அமைந்திருப்பது ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் எண்ணம், மனசோர்வு போன்ற எண்ணங்களை பிறருக்கு ஏற்படுத்தவல்லது.[2]

காரணங்கள்[தொகு]

மரபியல் காரணங்கள்[தொகு]

பெரும்பாலானோருக்கு இந்த கருநிற வளையங்கள் இருப்பது, நமது உடலின் சருமத் தோற்றத்தின் வழியே இரத்தக் குழாய்களைக் காண்பது ஆகும். கண் இமைகளைச் சுற்றியுள்ள சருமம் மிகவும் மெல்லியதாகும் (உடலின் பிற பகுதிகளில் உள்ள சருமம் இதைவிட 0.5 மி.மீ தடிமன் அதிகமிருக்கும்). கண்களுக்குக் கீழ் உள்ள கருநிற வளையங்கள் வழக்கமாக மரபியல் குணாதிசயங்களில் ஒன்றாக வந்தமையும். கண்களுக்கு அருகேயுள்ள சருமத்தில், இரத்தக் குழாய்களின் வழியே இரத்தம் செல்லும்போது அது நீல நிறத்தினை வெளிப்படுத்தும். மரபியல் குணாதிசயங்களைப் பொறுத்து சருமத்தின் தடிமன் வேறுபடும், இதனால் இரத்தக் குழாய்கள் வெளிப்புறம் தெரியும் நிலையும் வேறுபடும். மிகவும் மெல்லியதாக சருமம் இருக்குமெனில் அதன் வழியாக காணப்படும் இரத்தக் குழாய்கள் அதிகப்படியான கருநிற வளையங்களாகத் தோன்ற அதிக வாய்ப்புகள் உள்ளன. உடலில் ஆழமாக அமைந்துள்ள எலும்பு அமைப்பு மற்றும் நிழலாடல் போன்றவற்றாலும் இந்த கருநிற வளையங்கள் அதிக வெளிச்சத்துடன் தெரிய வாய்ப்புள்ளது.

ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் படை[தொகு]

கருநிற வளையங்கள் அமைந்துள்ள பகுதியினைச் சுற்றி அரிப்பு ஏற்படுதல், தேய்த்தல் போன்றவை சருமத்தின் நிறத்தினை இன்னும் அதிகமாக தோன்றச் செய்யும். சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கண்களுக்கு கீழே அழுக்குகள் இருப்பதை உணரலாம். இதற்கு முக்கியக் காரணம் ஒவ்வாமை ஆகும். சில உணவுப் பொருட்களின் ஒவ்வாமைகூட கண்களுக்குக் கீழ் உள்ள பகுதியினை அதிக வெளிச்சமாக காட்டி முகப்பொலிவினை மாற்றக் கூடியது.

மருந்துகள்[தொகு]

இரத்தக் குழாய்களை விரியச் செய்யும் எந்தவொரு மருந்துகளும் கருநிற வளையங்களைக் கண்களுக்குக் கீழ் தோற்றுவிக்கும். ஏனெனில் கண்களுக்குக் கீழ் உள்ள சருமம் மிகவும் மென்மையானது, இரத்தக் குழாய்களில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட வெளிப்புற சருமத்தில் வித்தியாசத்தினை தோற்றுவிக்கும்.

இரத்த சோகை[தொகு]

உணவுக் குறைபாடுகளால் முகத்தில் உள்ள சருமம், முக்கியமாக கண்களுக்குக் கீழ் உள்ள சருமத்தில் நிறமாற்றம் ஏற்படும். இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்து குறைபடும் நேரங்களிலும் இந்த கருநிற வளையங்கள் தோன்றும். இரும்புச் சத்து குறைபாடு இருக்கும்போது திசு செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் சென்றடையாமல் செய்துவிடும்.

மாதவிடாய் மற்றும் கற்ப காலங்களில் சருமம் வெளிரிய மங்கலான நிறத்துடன் காணப்படுவதற்கு இரும்புச் சத்து குறைபாடு காரணமாகும். இதனால் கண்களுக்குக் கீழ் உள்ள நரம்புகள் கூட வெளியில் சருமம் வழியே தெரியும்.

சோர்வு[தொகு]

சரியான அளவு தூக்கம் கிடைக்காத நேரங்களில் சருமத்தின் நிறம் மங்கலான வெளிரிய நிறத்துடன் காணப்படும், இதனால் சருமத்தின் நிறம் மாற்றமடைந்து நீலம் அல்லது வேறு நிறங்களில் காட்சியளிக்கும்.[3]

வயது[தொகு]

வயதுக்கு தகுந்தாற்போல் கருநிற வளையங்கள் வெளியில் தெரிவது மற்றும் அதன் தோற்றம் வீரியம்கொள்ளும்.[4] வயதாகும்போது திசுக்களை இணைக்கும் புரதச் சத்துக்கள் இழக்கப்படுவதால் சருமத்தின் பண்புகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சருமம் மிகவும் மெல்லியதாகவும், எளிதில் ஒளிபுகக் கூடியதாகவும் மாறிவிடும். சில பழக்கமான முகபாவங்களினால் ஒருபுறமுள்ள கண்ணின் கீழுள்ள கருநிற வளையங்கள், மற்றுமொரு கண்ணின் கீழுள்ள கருநிற வளையங்களைவிட வித்தியாசமாக காட்சியளிக்கும் (வித்தியாசமான புன்னகை, முகபாவனைகள்).

சிகிச்சை முறைகள்[தொகு]

ஹைட்ரோ குயினோன் கலவையானது எண்ணெய் இல்லாத திரவத்துடன் சேர்க்கப்பட்டு, கருநிற வளையங்கள் உள்ள பகுதிகளில் சலவைக்காக பயன்படுத்தவும். இதனால் அந்த நிறமாற்றம் குறைக்கப்படும். ஆனால், ஹைட்ரோ குயினோன் சருமத்தில் பயன்படுத்துவது ஐரோப்பிய நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவக் குழு, ஹைட்ரோ குயினோன் பயன்படுத்துவதை திரும்பப் பெற்றது.

இருப்பினும் சருமத்தின் வெண்மை நிறத்தினை அதிகரிக்க மற்றும் நிறமாற்றத்தினை குறைப்பதற்காக ஹைட்ரோ குயினோன் பயன்படுத்துவது உடலுக்கு நச்சும், தீங்கினையும் ஏற்படுத்தும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள காலகட்டத்தில் வெளிப்புறம் தடவும் வகையிலான திரவப் பொருட்கள் வெகுவாக சந்தைகளில் விற்கப்பட்டு வருகின்றன. இவை தொடர்பாக பல வகையிலான ஆய்வுகளும் முன்னேற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக, கருநிற வளையங்களைக் குறைக்க திரவப் பொருட்களில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் சேர்ப்பது சரியென கண்டறியப்பட்டுள்ளது.[5] சிறப்பு சிகிச்சைகளில் லேசர் மற்றும் அதிக ஒளிச்செறிவு கொண்ட ஒளியினை சருமத்தில் செலுத்தி கருவளையங்களை குறைப்பது போன்றவை தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.[6]

குறிப்புகள்[தொகு]

  1. "What causes the dark circles that sometimes appear under my eyes?". Mayo Clinic women's healthsource 7 (6): 8. 2003. பப்மெட்:12838159. 
  2. "Dark Circles Under Eyes". drbatul.com. 25 சூலை 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Dark Circles Under the Eyes". Medicine.net. Medicine.net. 2012-06-03. 25 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "What's Causing Your Dark Under-Eye Circles?". 100% Pure. 2016-04-13. 2016-08-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Alpha Hydroxy Acids". 14 ஜூலை 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Undereye Circles". 25 July 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருநிற_வளையங்கள்&oldid=3548134" இருந்து மீள்விக்கப்பட்டது