கரீனா பிரீ பைர் (இணைய வழி விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீ பைர்
ஆக்குனர் 111 டாட்ஸ் ஸ்டுடியோ[1]
வெளியீட்டாளர் கரீனா
ஆட்டப் பொறி யூனிட்டி கேம்
கணிமை தளங்கள் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம்,
ஐஓஎஸ்
வெளியான தேதி செப்டம்பர் 30, 2017 (பீட்டா)
பாணி பேட்டில் இராயல் விளையாட்டு
வகை தனி நபர்/இருவர்/பலர்


கரீனா பிரீ பையர் (Garena Free fire) garena நிறுவனத்தால்[2] தயாரிக்கப்பட்டு கரீனா நிறுவனத்தால் வெளிடப்பட்ட இணைய வழி விளையாட்டு ஆகும். இது 2019 ஆம் ஆண்டு திறன்பேசியில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு விளையாட்டு ஆகும். இது மக்களிடையில் மிகவும் பிரசித்தி பெற்றதால், இதற்கு சறந்த பிரபலமான விளையாட்டு என்னும் விருது கூகுள் ப்ளே ஸ்டோர் என்னும் ெயலி சார்பில் வழங்கப்பட்டது.[3] கடந்த 2௦19 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த விளையாட்டின் தரவிறக்கத்தின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.[4] இந்த விளையாட்டின் மேம்படுத்தப்பட்ட வடிவம் கரீனா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது.

விளையாடும் முறை[தொகு]

கரீனா பிரீ பையர் ஒரு இணையவழி விளையாட்டு ஆகும். இது ஒரு சுவாரசியமான மற்றும் கணிக்கமுடியாத ஒரு விளையாட்டாகும். இதில் 50 நபர்கள் விமானம் மூலம் ஒரு தனித்தீவிற்கு வந்தடைவார்கள். பின் ஒரு வான்குடை மூலம் தாங்கள் தீவில் இறங்க நினைக்கும் ஒரு பாதுகாப்பான இடத்தில் இறங்குவார்கள். அதில் விளையாடும் ஒவ்வொரு நபரும், தாங்கள் விளையாட்டை தொடங்கும் இடத்தைத் தாமே தேர்தெடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மற்றவர்களை தோற்கடிப்பதற்கான ஆயுதங்களையும், கவசங்களையும், தோட்டாக்களையும் மற்றும் முதலுதவி உபகரணங்களையும் அந்தத் தீவில் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நபருக்கும் உண்டான விளையாட்டுக் களமானது குறைந்து கொண்டே வரும். மற்ற நபர்களை எல்லாம் தோற்கடித்து வெற்றி பெறுபவரே அந்த தீவில் நீடித்து இருக்க முடியும். விளையாட்டுக் களமானது சுருங்கச் சுருங்க மற்ற நபர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் கட்டாயம் ஏற்படும். இதில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு தரவரிசை இருக்கும். அவர்கள் விளையாட்டில் வெற்றி பெற, வெற்றி பெற தரவரிசை முன்னேறிக் கொண்டே இருக்கும். இதில் தனி நபராக, இரண்டு பேராக மற்றும் நான்கு பேர் கொண்ட குழுவாகவும் விளையாடலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Free Fire - Thêm một PlayerUnknown's Battlegrounds 'made in Vietnam' nữa trên mobile". Gamek (in வியட்நாமீஸ்). 28 September 2017.
  2. "Free Fire - Thêm một PlayerUnknown's Battlegrounds 'made in Vietnam' nữa trên mobile". gamek.vn (in வியட்நாமீஸ்). 2017-09-28. Archived from the original on 2017-11-21. பார்க்கப்பட்ட நாள் 2020-04-23.
  3. Bald, Cameron (31 December 2019). "Garena Free Fire exclusive interview: What does the future hold for 2019's most downloaded mobile game?". Pocket Gamer.
  4. Jordan, Jon (November 19, 2019). "Garena’s battle royale game Free Fire surpasses $1 billion of lifetime revenue". Pocket Gamer. https://www.pocketgamer.biz/asia/news/72010/garena-battle-royale-free-fire-1-billion-dollars/. பார்த்த நாள்: 23 January 2020.