உள்ளடக்கத்துக்குச் செல்

கரிமதயோபாசுபேட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிமதயோபாசுபேட்டுகள் (Organothiophosphates) என்பவை (RO)3PS, [(RO)2P(S)O], R(RO)2PS, போன்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாடுகளால் விவரிக்கப்படும் கரிமபாசுபரசு சேர்மங்களைக் குறிக்கும். கரிமபாசுபோரோதயோயேட்டுகள் என்றும் இவற்றை அழைக்கலாம். கரிமபாசுபரசு சேர்மங்களின் துணைக்குழுவாக இவை வகைப்படுத்தப்படுகின்றன. கரிமதயோபாசுபேட்டுகளில் பல தீங்குயிர்க்கொல்லிகளாகவும் சில சேர்மங்கள் மருத்துவப் பயன்பாட்டிலும் மற்றும் சில எண்ணெய் கூட்டுசேர் பொருட்களாகவும் பயன்படுகின்றன[1].

ஒலிகோநியூக்ளியோடைடு பாசுபோரோதயோயேட்டுகள் என்பவை பாசுபரசு மையத்திலுள்ள ஆக்சிசன் அணுக்களில் ஒன்று கந்தகத்தால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட ஒலிகோநியூக்ளியோடைடுகள் ஆகும். இவ்வகைச் சேர்மங்கள் மரபணு பிறழ்ச்சி சிகிச்சைக்கான அடிப்படையாகும். பாமிவிர்சன் மருந்து, ஓப்ளிமெர்சன், அலிகேபோர்சன் மற்றும் மிப்போமெர்சன் மருந்துகள் இதற்கு உதாரணமாகும்[2]

மேலும் சில உதாரணங்கள்:

  • டையசினோன்
  • பெனிட்ரோதயோன்
  • பென்தயோன்.

P=O இரட்டைப் பிணைப்புகளுடன் கூடிய மாறுபட்ட மருந்துகள் உருவாக்கப்பட்டன. இவை பூச்சிக் கொல்லிகளாகப் பயன்படுத்தப்பட்டன. பாசுபரோதயோயேட்டு P=S பிணைப்பு பூச்சிகளைக் குறிவைத்து நச்சுத்தன்மை கொண்ட P=O பிணைப்பாக மாற்றப்படுகிறது.

கட்டமைப்பும் தயாரிப்பும்

[தொகு]

பொதுவாக நான்முகி பாசுபரசு(V) மையங்களை இவ்வகைச் சேர்மங்கள் பெற்றிருக்கும். பாரம்பரியாமாக மாலாதயோனில் விளக்கப்பட்டுள்ளபடி தயோபாசுபேட்டுகளில் P=S இரட்டைப் பிணைப்பு இணைந்திருக்க வேண்டும். தயோபாசுபேட்டுகளில் அமிபோசுட்டைன் மருந்தில் உள்ளதுபோல P-S ஒற்றைப் பிணைப்புகள் உள்ளன.

கருத்துருவில் அவை கனிம தயோபாசுபேட்டுகளிலிருந்து (PO4−xS3−
x
) வழிப்பெறுதியாகப் பெறப்படுகின்றன. உண்மையில் பல கரிமதயோபாசுபேட்டுகள் இருகரிமயிருதயோபாசுபாரிக் அமிலங்களின் இடைநிலைகள் வழியாகத் தயாரிக்கப்படுகின்றன, பாசுபரசுபென் டாசல்பைடுடன் ஆல்ககால்கள் சேர்த்து சூடுபடுத்தினால் இருகரிமயிருதயோபாசுபாரிக் அமிலம் உருவாகிறது.:[1]

P2S5 + 4 ROH → 2 (RO)2PS2H + H2S

டைமெத்தில் டைதயோபாசுபாரிக் அமிலம் மற்றும் டையெத்தில் டைதயோபாசுபாரிக் அமிலம் போன்றவை இம்முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன. டைமெத்தில் டைதயோபாசுபாரிக் அமிலம் மாலாதயோன் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 J. Svara, N. Weferling, T. Hofmann "Phosphorus Compounds, Organic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2006. எஆசு:10.1002/14356007.a19_545.pub2
  2. Kurreck, J., "Antisense technologies. Improvement through novel chemical modifications", European Journal of Biochemistry 2003, 270, 1628-1644.எஆசு:10.1046/j.1432-1033.2003.03555.x
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமதயோபாசுபேட்டுகள்&oldid=3446719" இலிருந்து மீள்விக்கப்பட்டது