உள்ளடக்கத்துக்குச் செல்

கயேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கயேன் (Cayenne) என்பது தென் அமெரிக்காவில் பிரான்சின் நேரடி அதிகாரத்துக்குள் இருக்கும் ஒரு ஆட்சி நிலப்பரப்பான பிரெஞ்சு கயானாவின் தலைநகரம் ஆகும். இது அட்லான்டிக் கடற்கரையில் கயேன் ஆற்றின் அருகில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மொத்தப் பரப்பளவு 23.60 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2012 ஆம் ஆண்டில் சனவரி மாதத்தில் இடம்பெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு அமைவாக கயேன் மாநகராட்சிப் பிராந்தியத்தில் 121,308 மக்கள் வாழ்ந்து வந்ததுடன் கயேன் நகரில் மட்டும் 55,198 மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்நகரின் மகுட வாசகம் "பணத்தைத் தருவிப்பது வேலையே" (Work brings wealth) என்பதாகும்.

பொருளாதாரம்

[தொகு]

இறால் வளர்ப்பின் பிரதான கைத்தொழில் மையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நகரில் சர்க்கரை சுத்திகரிப்புத் தொழிலும் முன்னைய நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

காலநிலை

[தொகு]

கோப்பென் காலநிலை வகைப்பாட்டிற்கு அமைவாக கயேன் நகரம் அயன மண்டல பருவக்காற்றுக் காலநிலையினைக் கொண்டுள்ளது. காலநிலைக்கு அமைவாக இந்நகரத்தில் குளிர் காலம் நிலவும் காலப்பகுதி அதிகமாகவும் வெப்ப காலம் நிலவும் காலப்பகுதி குறைவாகவும் உள்ளது. செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் ஆகிய இரு மாதங்களுமே வெப்பக் காலநிலை நிலவும் மாதங்கள் ஆகும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Cayenne – Félix Eboué Airport (in Matoury)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.5
(90.5)
32.3
(90.1)
32.2
(90)
33.0
(91.4)
33.2
(91.8)
33.7
(92.7)
33.7
(92.7)
34.2
(93.6)
34.5
(94.1)
35.1
(95.2)
34.2
(93.6)
34.1
(93.4)
35.1
(95.2)
உயர் சராசரி °C (°F) 29.1
(84.4)
29.2
(84.6)
29.6
(85.3)
29.9
(85.8)
29.9
(85.8)
30.2
(86.4)
30.8
(87.4)
31.6
(88.9)
32.1
(89.8)
32.2
(90)
31.5
(88.7)
30.1
(86.2)
30.5
(86.9)
தாழ் சராசரி °C (°F) 23.3
(73.9)
23.4
(74.1)
23.5
(74.3)
23.7
(74.7)
23.5
(74.3)
22.9
(73.2)
22.4
(72.3)
22.4
(72.3)
22.2
(72)
22.3
(72.1)
22.5
(72.5)
23.1
(73.6)
22.9
(73.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 17.4
(63.3)
18.9
(66)
18.5
(65.3)
19.0
(66.2)
18.8
(65.8)
18.9
(66)
19.0
(66.2)
19.3
(66.7)
18.7
(65.7)
18.6
(65.5)
17.2
(63)
18.8
(65.8)
17.2
(63)
பொழிவு mm (inches) 451.2
(17.764)
309.4
(12.181)
334.3
(13.161)
448.4
(17.654)
579.4
(22.811)
411.4
(16.197)
245.7
(9.673)
143.6
(5.654)
55.7
(2.193)
63.3
(2.492)
133.4
(5.252)
340.5
(13.406)
3,516.3
(138.437)
சராசரி பொழிவு நாட்கள் 23.63 20.00 20.67 22.20 26.43 25.17 20.57 14.20 7.13 7.60 11.93 21.57 221.10
சூரியஒளி நேரம் 94.3 89.9 119.0 118.1 118.8 148.6 196.5 229.8 255.2 251.1 217.3 137.5 1,976.0
ஆதாரம்: Meteo France[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Données climatiques de la station de Matoury" (in French). Meteo France. Archived from the original on டிசம்பர் 9, 2014. பார்க்கப்பட்ட நாள் December 9, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
  2. "Climat Guyane". Meteo France. Archived from the original on மார்ச் 31, 2019. பார்க்கப்பட்ட நாள் December 9, 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயேன்&oldid=3928563" இலிருந்து மீள்விக்கப்பட்டது