கம்மின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி, நாக்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தாவின் கம்மின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி, நாக்பூர்
குறிக்கோளுரைகல்வியின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல்
உருவாக்கம்2010
தலைவர்முனைவர் மிலிந்த் கானாபுர்கர்
மாணவர்கள்347 (மகளிர்)
அமைவிடம்
மௌஜே சுக்லி (குப்சுப்)
, , ,
வளாகம்52609.1 sq.m
இணையதளம்கல்லூரி இணையதளம்

மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தாவின் கம்மின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி, நாக்பூர் (CCOEW, நாக்பூர்) என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மகளிர் பொறியியல் கல்லூரியாகும். நாக்பூர் பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ள இக்கல்லூரியானது மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா என்ற அமைப்பினால் நிவகிக்கப்படுகிறது.

புதுமையான நடைமுறைகள் மற்றும் தரமான வேலைவாய்ப்புகள் மூலம் தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் இக்கல்லூரியானது தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையினால் பி ++ தரமதிப்பு பெற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[1]

வரலாறு[தொகு]

1896 ஆம் ஆண்டில் மகரிஷி கார்வே என்பவர் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பெண்களின் கல்வி மற்றும் விடுதலை ஆகியவைகளுக்காக ஹிங்னே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதுவே பிற்பாடு மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தா(MKSSS), என மாறியுள்ளது.[2]

இந்நிறுவனத்தின் பெயர் இந்தி மொழியில் அமைந்துள்ளது. அதில், கார்வே என்பது நிறுவனரின் பெயராகும். இவர் மகரிஷி அதாவது சிறந்த முனிவர் என்று பெருமையாக அழைக்கப்பட்டார். ஸ்திரீ என்றால் பெண்கள், சிக்ஷன் என்றால் கல்வி மற்றும் சமஸ்தா என்றால் நிறுவனம் அதன்படி கார்வே மகரிஷி பெண்கள் கல்வி நிறுவனம் என்பதே இதன் பொருளாகும்.

இதன் மூலம் முதன்முதலில் புனேவில் மகரிஷி கார்வே ஸ்திரீ சிக்ஷன் சம்ஸ்தாவின் கம்மின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் பெண்களுக்கான பொறியியல் கல்லூரியை நிறுவியது , இவ்வாறு இது தொடங்கி, 119 ஆண்டுகளில் புனே, நாக்பூர், சதாரா, வை, ரத்னகிரி, கம்ஷெட் போன்ற மகாராஷ்டிரா மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து நடத்திவருகிறது.

இந்த நாக்பூரில் அமைந்துள்ள கம்மின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி ராஷ்டிரசந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது [3]

படிப்புகள்[தொகு]

கம்மின்ஸ் பொறியியல் கல்லூரி, நாக்பூர்,

  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, [4]
  • கணினி பொறியியல்,
  • மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்,
  • இயந்திர பொறியியல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றுடன் தொடர்புடைய பல்வேறு பொறியியல் துறைகளில் இளங்கலை பாடங்களை பயிற்றுவிக்கிறது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cummins College of Engineering for Women, Nagpur". Archived from the original on 2018-08-05. பார்க்கப்பட்ட நாள் 2018-08-05.
  2. "Institute Profile | About Legacy of Cummins College of Engineering for Women, Nagpur". Archived from the original on 2017-12-17.
  3. "Pune engineering college for women registers strong placements | Pune News - Times of India".
  4. "Allied Science | Cummins College of Engineering For Women, Nagpur". பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.
  5. "Departments | Cummins College of Engineering For Women, Nagpur". பார்க்கப்பட்ட நாள் 2019-12-08.