கமெங் தோலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமெங் தோலோ (Kameng Dolo) இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.

கலிகோ புல் அரசாங்கத்திலும் கெகாங் அபாங்கு அரசாங்கத்திலும் அருணாச்சலப் பிரதேசத்தின் துணை முதல்வராக கமெங் தோலோ இருந்தார்.

2003 ஆம் ஆண்டு சூலை மாதம் 25 ஆம் தேதியன்று இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய கபெங் தோலோ, அருணாச்சல காங்கிரசின் கெகாங் அபாங்குடன் சேர்ந்து தோலோ காங்கிரசு என்ற கட்சியை அருணாச்சலப் பிரதேசத்தில் நிறுவினார். 2003 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 30 ஆம் தேதியன்று தோலோவின் காங்கிரசு கட்சி பாரதிய சனதா கட்சியுடன் ஒன்றிணைக்கப்பட்டது.[1] கபெங் தோலோ பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். 2015 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினர் ஒருவர் அவர்களின் அரசாங்கத்தில் கிளர்ச்சி செய்தபோது இவர் தனது விசுவாசத்தை மாற்றினார். [2] [3] [4] [5]

8 மார்ச் 2017 அன்று, தோலோ தனது வேட்புமனுவை மோசடியான முறையில் திரும்பப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, தோலோ தனது இடத்தை இழந்தார். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Apang-led parties merge with BJP". Rediff (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
  2. Dolo appointed principal advisor to Arunachal CM
  3. "Kameng Dolo takes oath as Protem Speaker of Arunachal Assembly". Zee News (in ஆங்கிலம்). 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
  4. "Arunachal inks electoral history as 11 Congress nominees win unopposed". DNA India (in ஆங்கிலம்). 2014-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
  5. "Kameng Dolo takes oath as Protem Speaker of Arunachal Assembly". DNA India (in ஆங்கிலம்). 2014-05-30. பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
  6. "Dolo loses assembly seat". India Today (in ஆங்கிலம்). March 8, 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமெங்_தோலோ&oldid=3787137" இலிருந்து மீள்விக்கப்பட்டது