உள்ளடக்கத்துக்குச் செல்

கமல் தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமல் தேசாய் (Kamal Desai) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1928 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். மராத்தி மொழியில் நாவல்கள் எழுதினார்.[1] இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

பெல்காம் மாவட்டத்தில் உள்ள யம்கான் மார்டியில் பிறந்தார். பெல்காமில் படித்தார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் மராத்தியில் முதுகலைப் பட்டம் முடித்தார்.[2] கமல் தேசாய் 1955 ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கினார் மற்றும் புனேவில் ஓய்வு பெற்றார்.[1]

1975 ஆம் ஆண்டு வெளிவந்த தொப்பி அணிந்த பெண் என்ற நாவலுக்காக இவர் மிகவும் பிரபலமானவர்.

தேர்ந்தெடுட்க்கப்பட்ட படைப்புகள்[1]

[தொகு]
  • ரேங்கு (நிறங்கள்), கதைகள் (1962)
  • ரேட்ராந்தின் அம்கா யுதாச்சா பிரசாங்கு (நாங்கள் இரவும் பகலும் போரை எதிர்கொள்கிறோம்), நாவல் (1963)
  • கால சூர்யா (இருண்ட சூரியன்), நாவல் (1972)
  • ரேங்கு-2, கதைகள் (1998)[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Tharu, Susie J; Lalita, Ke (1993). Women Writing in India: The twentieth century. pp. 265–67. ISBN 1558610294.
  2. 2.0 2.1 Miller, Jane Eldridge (2001). Who's who in Contemporary Women's Writing. pp. 81–82. ISBN 0415159806.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_தேசாய்&oldid=3416276" இலிருந்து மீள்விக்கப்பட்டது