கமலப்பிரியா (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமலப்பிரியா ஓர் தமிழக எழுத்தாளர் ஆவார். இவரின் இயற்பெயர் கே. ரங்கராஜன். தன் மனைவியின் பெயரான கமலா என்பதை புனைபெயராக்கி எழுத்தாளர் ஆனார். இந்திய அரசு ஊழியரான இவர், தன் புதினங்களுக்காக பல்வேறு ஆதாரங்களைத் திரட்டி எழுதியுள்ளார். கீழைநாட்டு கவிதை மஞ்சரி என்ற கவிதைத் தொகுப்பில் இவர் நூல்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆக்கங்கள்[தொகு]

புனைகதைகள்

  • கடல் மைந்தன் (சமுத்திரகுப்தரின் வரலாறு)
  • கொங்கு திலகம் (தீரன் சின்னமலை வரலாறு)[1]
  • மதுர வள்ளி (தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் வரலாறு)[2]
  • நாகமலைத் தீவு (சங்க காலம் பற்றியது)
  • பொக்கிஷ வேட்டை [3]

விருதுகள்[தொகு]

  • பாரதி பண்செல்வர் விருது
  • இலக்கியத் தென்றல் விருது

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலப்பிரியா_(எழுத்தாளர்)&oldid=3238294" இலிருந்து மீள்விக்கப்பட்டது