கபாலகார சுவாமி கதைப்பாடல்
கபாலகார சுவாமி கதைப்பாடல் என்பது நாட்டார் கதைப்பாடல்களில் ஒன்றாகும்.
கதைச் சுருக்கம்
[தொகு]குட்டியாலி மரக்காயன் என்பவன் கீழக்கரையில் ஆட்சி செய்தான். அவனிடம் 999 கப்பல்கள் இருந்தன. தனது ஆயிரமாவது கப்பலை அவன் ஓரே மரத்தில் செய்ய ஆசை கொண்டான். அதற்காக பலத்த ஏற்பாட்டுடன் பெரிய மரத்தை தேடி பயணப்பட்டான். அந்தப் பயணம் கடல்வழியாக அமைந்தது.
தூத்துக்குடி, குலசேகரப் பட்டிணம் போன்ற இடங்களில் கப்பபல்களை நிறுத்தி இளைப்பாறிவிட்டு பயணப்பட்டார்கள். கூடுதாழையில் மரகாகாயனுக்கு இடது கண் துடித்தது. அதனால் அங்கிருந்த உவரி சுயம்புலிங்க அய்யனார் கோயில், அந்தோணியார் கோயில் ஆகியவற்றில் வழிபட்டனர்.
திருவனந்தபுரத்தில் இறங்கினான். அங்கு மன்னனை சந்தித்து தன் கப்பல் ஆசையை கூறினான். மன்னரும் மரத்தினை தேடி வெட்டிக் கொள்ள சம்மதித்தார். கபாலகாரன் எனும் தெய்வம் குடியிருக்கும் மரத்தை தேர்வு செய்து வெட்டினார்கள். அதனால் தீய சகுணங்கள் உண்டானது. ஜோதிடம் கேட்ட போது அம்மரத்தை வெட்டினால் உண்டாகும் தீமை பற்றி தெரிந்து கொண்டார். எனினும் மரத்தை வெட்டி எடுத்து சென்றார். அதனால் கோபம் கொண்ட கபாலகாரன் தன்னுடைய பேய் படையுடன் வந்து அனைவரையும் கொன்றார்.
காலம்
[தொகு]இக் கதைப்பாடலில் குறிப்பிடப்படும் கடற்கரை இடங்கள் கி.பி. 16ஆம், 17ஆம் காலத்தவை.[1]