கனிச்சீர் - தமிழ் இலக்கணம் யாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விளக்கம்[தொகு]

மூவசைச்சீரில் நிரை அசையை இறுதியாகக் கொண்டு முடிபவை கனிச்சீர் எனப்படும்.

கனிச்சீர் அமையும் வகைகள்[தொகு]

நேர்,நேர்,நிரை = தேமாங்கனி

நிரை,நேர்,நிரை = புளிமாங்கனி

நிரை,நிரை,நிரை = கருவிளங்கனி

நேர்,நிரை,நிரை = கூவிளங்கனி

பெயர்க்காரணம்.[தொகு]

வாய்ப்பாட்டின் இறுதியில் கனி என முடிவதால் கனிச்சீர் என்பர்.

சிறப்புப் பெயர்[தொகு]

இச்சீர் வஞ்சிப்பாவுக்கு உரியதால் வஞ்சியுரிச்சீர் என்றழைப்பர்.

மேற்கோள்[தொகு]

1.தமிழ் இலக்கணக் களஞ்சியம் - தேவிரா

2.நற்றமிழ் இலக்கணம் - அ.ஞானசம்பந்தம்

3.தொல்காப்பியம் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.