கனன் மிஸ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனன் மிஸ்ரா
பிறப்பு(1944-01-02)2 சனவரி 1944
கட்டக், ஒடிசா, இந்தியா
இறப்பு7 மார்ச்சு 2015(2015-03-07) (அகவை 71)
கட்டக்
தொழில்எழுத்தாளர், ஆசிரியர்
மொழிஒடிய மொழி
வகைகவிஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சூர்யமுகிரா ஸ்வப்னா
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் கனன் மிஸ்ரா (1944-2015) ஆவார்.

வரலாறு[தொகு]

மிஸ்ரா, ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில்1944 ம் ஆண்டு ஜனவரி 1 அன்று குஞ்சாபிஹாரி திரிபாதி மற்றும் சுரேகா திரிபாதி என்ற பெற்றோருக்குப் பிறந்துள்ளார். இவர், ஒடிய மொழியில் ஐந்து நாவல்கள், நான்கு கவிதைத் தொகுப்புகள், ஓர் ஆங்கில மொழிபெயர்ப்பு நாவல் மற்றும் ஏழு குழந்தைகளுக்கான கதைகளையும் எழுதியுள்ளார். திருமணமான இவர், எழுபத்தோராவது வயதில் 2015 ம் ஆண்டு மார்ச் மதம் 7ம் தேதி மரணித்தார்.

விருதுகள்[தொகு]

ஒடிசா மாநில அரசிடமிருந்து இலக்கியத்திற்கான உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதை இவரின் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமான சூர்யமுகி ரா ஸ்வப்னா [1] என்பதற்காக 2004 ம் ஆண்டில் பெற்றுள்ளார். [2] [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனன்_மிஸ்ரா&oldid=3680918" இருந்து மீள்விக்கப்பட்டது