கனக் மஞ்சரி சாகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனக் மஞ்சரி சாகு (Kanak Manjari Sahoo பிறப்பு ஏப்ரல் 1957 14) ஓர் இந்திய ஒடிய மொழி சிறுகதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தி மற்றும் வங்காள மொழிக் கதைகளை ஒடிய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்கிறார் . இவர் தற்போது புவனேஸ்வரில் வசிக்கிறார், மேலும் பல ஒடிய பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களுக்கு பங்களிப்பாளராக உள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கனக் மஞ்சரி சாகு பிரபல ஆங்கில பேராசிரியரும் எழுத்தாளருமான தரனிதர் சாகுவின் மனைவி ஆவார். இந்த தம்பதியினருக்கு அயஸ்கண்ட் சாகு, லோபமுத்ரா சாகு மற்றும் மோனலிசா சாகு என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர்.

வெளியீடுகள்[தொகு]

  • அஸ்தாராக், கதைகளின் தொகுப்பு (சர்ஜனா பப்ளிஷர்ஸ், பெர்ஹாம்பூர், 1998)
  • ஜாகிர் உசேனின் அபு கான் ரா சேலி (மத்திய சாகித்ய அகாடமி, புது தில்லி, 2002) இன் ஒடிய மொழிபெயர்ப்பு அபு கான் ரா பக்ரி
  • தேர்ந்தெடுக்கப்பட்ட வங்காள கதைகளின் ஒடிய மொழிபெயர்ப்பான லால் டாடி அண்ட் அதர் ஸ்டோரிஸ்
  • கதகாரா ஓ அனன்யா கல்பா, தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தி கதைகளின் ஒடிய மொழிபெயர்ப்பு (வெளியீட்டாளர்: வித்யாபுரி, கட்டாக், 2006)
  • தரியா பரிர் கதா, ஒரு பயணக் குறிப்பு

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

  • கஞ்சம் ஜில்லா லேகா சாமுகியா, பெர்ஹாம்பூர், 2004
  • உபேந்திர பஞ்சா அறக்கட்டளை, பெர்ஹாம்பூர், 2004
  • கஸ்தூரி அம அஸ்மிதா, புவனேஸ்வர் புத்தக கண்காட்சி, 2005
  • பிபபனா சம்மன், தெங்கனல், 2004
  • கோகர்னிகா சம்மன், ஜராகா, 2005
  • தட்சிணா ஒடிசா சரஸ்வதா சம்மன், 2005
  • இ.எஸ்.இ.பி.எம்., ஸ்ரேஸ்தா சப்திகா கல்பா புராஸ்கர்
  • 14 வது கலிங்க புத்தக கண்காட்சியில் பூர்னெந்து மிஸ்ரா ஸ்மராகி புரஸ்கர் 2011.
  • பிரமோத் குமார் மகாநந்தியா அறக்கட்டளை விருது, 2012
  • மலாலா சுயசரிதைக்கான மொழிபெயர்ப்புக்கான ராஜதானி புத்தக கண்காட்சி விருது 2014
  • மொழிபெயர்ப்புக்கான புவனேஸ்வர் புத்தக கண்காட்சி விருது 2015

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கனக்_மஞ்சரி_சாகு&oldid=3137397" இலிருந்து மீள்விக்கப்பட்டது