கந்துலா துர்கேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கந்துலா துர்கேசு
Kandula Durgesh
ஆந்திரப் பிரதெச சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2007–2013
தொகுதிஇராசமுந்திரி கிராமப்புற சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிசனசேனா கட்சி
துணைவர்உசா ராணி
பிள்ளைகள்இரங்கப் பிரியா (மகள்) மற்றும் கிருட்டிணா தேச்சா (மகன்)

கந்துலா துர்கேசு (Kandula Durgesh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கந்துலா லட்சுமி துர்கேசு பிரசாத்து என்ற பெயராலும் அறியப்படுகிறார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 2007 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஆந்திர பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். [1] 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் சன சேனா கட்சி [2] வேட்பாளராக இராசமுந்திரி கிராம சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோற்கடிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு ஆதரவாக 42,685 வாக்குகளைப் பெற்றார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLC's from Andhra Pradesh 2009-2014" (PDF).
  2. "Declaration of Affidavit for 2019 assembly election by Kandula Durgesh".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்துலா_துர்கேசு&oldid=3824026" இலிருந்து மீள்விக்கப்பட்டது