கத்திரிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கத்திரிமலை தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பர்கூர் மலைப்பகுதியில், அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து ஏறத்தாழ 3500அடி உயரத்தில், மலையின் உச்சியில் அமைந்துள்ள இக்கிராமத்திற்கு, போக்குவரத்திற்கான பாதை ஏதும் இல்லை. மக்கள் ஒற்றையடிப்பாதையின் வழியே நடந்து செல்கின்றனர். மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 9கிமீ கால்நடையாக நடந்து சென்றால் இக்கிராமத்தை அடையலாம். கைத்தடி ஊன்றிக்கொண்டுதான் நடக்க முடியும். மலைவாழ் இனமான சோளகர் இன மக்கள் இம்மலைப்பகுதியில் வசிக்கின்றனர். இம்மக்கள் ஆடு,மாடு மேய்த்தல் மற்றும் முறம் பின்னும் தொழிலை மேற்கொள்கின்றனர்.இம்மலையில் மின்சார வசதி இல்லை.எனவே மக்கள் நாகரீக வளர்ச்சியில் பல ஆண்டுகள் பின்னோக்கி உள்ளனர்.இக்கிராமத்தில் அரசு உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்படுகிறது. சுமார் 33லட்சத்தில் கட்டப்பட்டுள்ள இப்பள்ளி இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. எனினும் இம்மக்களின் பெரும்பான்மையினரிடம் கல்வி பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இங்கு அமைந்துள்ள ”மங்கம்மாள்” கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோவில் திருவிழாக்கள் இம்மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்திரிமலை&oldid=1792651" இருந்து மீள்விக்கப்பட்டது