கதிர் உயிரியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

'கதிர் உயிரியல் (radiobiology) அல்லது கதிரியக்க உயிரியல் (radiation biology) எனும் அறிவியல் பகுதி கதிர்வீச்சின் தாக்கத்தால் உயிரிகளிடம் தோன்றும் உயிரியல் விளைவுகளை விரிவாக ஆராயும் அறிவியலாகும். இங்கு எக்சு, காமா, புற ஊதா கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள், வானொலி அலைகள், மற்றும் ஒலி அலைகளால் தோன்றும் விளைவுகளை ஆராயும் பகுதியாகும். புற்றுநோய் மருத்துவத்திலும் கதிரியல் பாதுகாப்புத் துறையிலும் (Radiation Protection) பெரிதும் பயனுள்ள பகுதியாகும்.

பிரான்சு நாட்டு கதிரியல் மருத்துவர் பெர்கோனியும் ( BERGONIE- 1857-1925) அதே நாட்டினரான மருத்துவர் ட்றைபோண்டேயும் (TRIBONDAEU 1872-1918) கதிர் உயிரியல் பற்றி விரிவாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.அவர்களின் ஆய்விலிருந்து,

குருத்தணுக்கள் (Stem cell) அதிக கதிர் உணர்திறனுடையன என்றும்,

திசுக்களும் உறுப்புகளும் வளரும் நிலையில் அதிக உணர்திறனுடையன என்றும்,

வளர்சிதை செயல்பாடுகள் அதிகமாக உள்ள போதும் கதிர் உணர்திறன் அதிகமாக உள்ளன என்றும்,

உயிரணுக்கள் பிரிந்து வளரும் வீதம் அதிக மாக உள்ள நிலையிலும் உணர்திறன் அதிகமாக உள்ளன என்றும் நிறுவினர்.

மேலும் உயிரணுச் சுழற்ச்சியின் போது ,பிரிநிலையிலும் (Mitotic state) அதிக உணர்திறனுடையன. இவ்விதி பெர்கோனி - ட்றைபோண்டே விதி எனப்படுகிறது.

வலைதளத்திலிருந்து பெறப்பட்டக் கருத்து.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதிர்_உயிரியல்&oldid=1825237" இருந்து மீள்விக்கப்பட்டது