உள்ளடக்கத்துக்குச் செல்

கதிரியக்க சிகிச்சை மற்றும் அணுசக்தி மருத்துவ நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கதிரியக்க சிகிச்சை மற்றும் அணுசக்தி மருத்துவ நிறுவனம் ( Institute of Radiotherapy and Nuclear Medicine) பாக்கித்தான் நாட்டிலுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் தலைநகரமான பெசாவரில் அமைந்துள்ள கைபர் மருத்துவக் கல்லூரியில் இந்நிறுவனம் உள்ளது. பாக்கித்தான் அணுக்கரு ஆற்றல் ஆணையம் நடத்தும் 18 புற்றுநோய் மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்[1]. பாக்கித்தானின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்காக அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு பாக்கித்தான் அணுக்கரு ஆற்றல் முகமை முன்னுரிமை அளித்து வருகிறது.

அணுக்கரு மருத்துவம், புற்றுநோயியல் மற்றும் கதிரியக்க சிகிச்சை நிறுவனத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை அளிக்க இங்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை கருதப்படுகிறது [2].

கதிரியக்க சிகிச்சை மற்றும் அணுசக்தி மருத்துவ நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கைபர் பக்துன்வா மாகாணத்தில் நிறுவப்பட்ட முதலாவது மற்றும் மிகப்பெரிய மருத்துவ நிறுவனம் இதுவே ஆகும் [3]. புற்றுநோயாளிகளைக் கண்டறிதல் மற்றும் முழுமையாகச் சிகிச்சை அளித்து குணப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதால் இந்நிறுவனத்தின் நோக்கமாகும். புற்றுநோய் சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு குறித்த கருத்தரங்குகள், பட்டறைகளை ஏற்பாடு செய்து இந்நோய் தொடர்பான விழிப்புணர்வையும் இந்நிறுவனம் செய்துவருகிறது. ஆப்கானிசுத்தானிலிருந்து வருகை தரும் நோயாளிகள் உட்பட கைபர் பக்துன்வா மாகாணம் மற்றும் இதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் நோயாளிகளென ஆண்டுக்கு 53000 பேருக்கு இந்நிறுவனத்தில் சிகிச்சையளிக்கப்படுகிறது. பாக்கித்தான் அணுசக்தி முகமையின் ஆதரவின் கீழ் செயல்படும் 5 ஆவது நிறுவனம் கதிரியக்க சிகிச்சை மற்றும் அணுசக்தி மருத்துவ நிறுவனம் ஆகும்[4] பின்வரும் அலகுகள் இந்நிறுவனத்தில் இயங்குகின்றன.

கதிரியக்க சிகிச்சைப் பிரிவு அணுக்கரு மருத்துவப் பிரிவு புற்று நோய்க்குறியியல் பிரிவு புற்றுநோய் பராமரிப்புப் பிரிவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.paec.gov.pk/Medical/
  2. http://www.paec.gov.pk/Medical/Centres/
  3. "institute of radiotheraphy and nuclear medicine (IRNUM), peshawar". பார்க்கப்பட்ட நாள் 21 January 2014.
  4. www.paec.gov.pk/irnum