கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கதிரியக்க நியூக்கிளைடு பல்வேறு நிலைகளில் சிதையும் போது நிகழும் இடப்பெயர்ச்சிகள். கிடைமட்ட அச்சு: அணு எண் (Z.) செங்குத்து அச்சு: நியூட்ரான் எண் (N)

கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி (Law of radioactive displacements) ஃபெசான்சு மற்றும் சாடி விதி என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. கதிரியக்க வேதியியல் மற்றும் அணுக்கரு இயற்பியல் துறைகளில் கதிரியக்கச் சிதைவின் போது தனிமங்கள் மாற்றமடைவதை விளக்கும் விதி கதிரியக்க இடப்பெயர்ச்சி விதி எனப்படுகிறது. இவ்விதி 1913 ஆம் ஆண்டு பிரடெரிக் சாடி மற்றும் காசிமியர்சு ஃபெசான்சு ஆகியோர் கண்டறிந்தனர். இதனால் இவ்விதி ஃபெசான்சு மற்றும் சாடி விதி எனப் பெயரிடப்பட்டது. ஒரே நேரத்தில் இருவரும் தனித்தனியாக இவ்விதியைக் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் [1][2].

கதிரியக்கச் சிதைவின் தன்மைக்கேற்ப எந்த தனிமமும் ஐசோடோப்பும் உருவாகின்றன என்பதை இவ்விதி விவரிக்கிறது.

  • ஒரு தனிமம் ஆல்பா கதிர் ஒன்றை வெளிவிட்டு சிதைவடையும் போது தோன்றும் மகள் தனிமமானது தாய் தனிமத்தை விட 2 அலகுகள் அணு எண்ணிலும் 4 அலகுகள் அணு நிறை எண்ணிலும் குறைந்து காணப்படும்.

உதாரணம்:

  • ஒரு தனிமம் பீட்டா கதிர் ஒன்றை வெளிவிட்டு சிதைவடையும் போது தோன்றும் மகள் தனிமமானது தாய் தனிமத்தை விட1 அலகுகள் அணு எண் மிகுந்தும் அணு நிறை எண்ணில் மாற்றமேதுமின்றியும் காணப்படும்.

உதாரணம்:

  • β− சிதைவு அல்லது எலக்ட்ரான் உமிழ்வு என்று இவ்வினை குறிக்கப்படுகிறது. 1913 இல் இவ்விதியைக் அவர்கள் கண்டறிந்தபோது பீட்டா (β− ) சிதைவு ஒன்று மட்டுமே உணரப்பட்டது. பின்னர் பிற பீட்டா சிதைவு வினைகள் அறியப்பட்டன. β+ சிதைவு (பாசிட்ரான் உமிழ்வு), எலக்ட்ரான் பிடிப்பு போன்றவையும் அறியப்பட்டன. இவ்வகை வினைகளில் தோன்றும் மகள் தனிமமானது தாய் தனிமத்தை விட1 அலகுகள் அணு எண் குறைந்து காணப்படுகிறது.

உதாரணம் :

மேற்கோள்கள்[தொகு]

  1. Kasimir Fajans, "Radioactive transformations and the periodic system of the elements". Berichte der Deutschen Chemischen Gesellschaft, Nr. 46, 1913, pp. 422–439
  2. Frederick Soddy, "The Radio Elements and the Periodic Law", Chem. News, Nr. 107, 1913, pp. 97–99