கதித்தமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமைவிடம்[தொகு]

திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி வட்டத்திற்கு உட்பட்ட,ஊத்துக்குளியில் புகழ் பெற்ற கதித்தமலை அமைந்துள்ளது.இது கைத்தமலை என்றும் கதிர்த்தமலை என்றும் அழைக்கப்படுகிறது.இங்கு வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

கதித்த என்பதற்கு எழுதல்,நற்கதியடைதல்,மிகுதல்,கனமான,உயர்ந்த என்றெல்லாம் பல பொருள் உண்டு.கதித்த என்னும் சொல்லுக்கு கோபித்த என்ற பொருளும் உண்டு.

அம்மையப்பனாகிய பெற்றோரிடம் ஞானப்பழத்தை பெறாத முருகன் அவர்களிடம் கோபித்துக்கொண்டு இங்கு வந்தால் (கோபித்தமலை) கதித்தமலை ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.

சிறப்பு[தொகு]

தென்னகத்தில் எங்கும் இல்லாத வகையில் இந்த கோவிலில் மரச்சிற்பத்தினால் செய்யப்பட்ட தேர் மலையின் மீது அமைந்துள்ள கோவிலை சுற்றி வலம் வருவது சிறப்பாகும்.மற்ற முருகன் கோவில்களில் தேரானது மலைக்கு கீழ்தான் வலம் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மயூரகிரி[தொகு]

கதித்தமலை மயூரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.கதித்தமலை மயில் வடிவில் உள்ளது.மயிலுக்கு வடமொழியில் மயூரம் என்று பெயர்.அதனால் கதித்தமலையை மயூரகிரி என்றும் மயூரகிரி ஷேத்ரம் என்றும் அழைப்பர்.மயூரகிரி சித்தர் இங்கு அடக்கமாகியுள்ளார்.

கதிர்த்தமலை[தொகு]

ஆர்.தியாகராஜன் அவர்கள் 1966 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு நூலில் கதித்தமலையை கதிர்த்தமலை என குறிப்பிடுகிறார்.கதிர்த்த என்னும் சொல்லுக்கு பிரகாசித்தல்,ஒளிவிடுதல் என்று பொருள் உண்டு.கதிர் உதிர்த்த மலை,கதித்தமலை ஆயிற்று.

ஆலயங்கள்[தொகு]

இந்த கோவிலில் மூலவரின் பின்புறம் வள்ளி,தெய்வானை சன்னதிகள் உள்ளன. திருமணத் தடை நீக்கும் ஆலயமாக உள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் மஞ்சள்,குங்குமம்,ஜாக்கட்,வளையல்,வெற்றிலை,பாக்கு ஆகியவற்றை வைத்து வழிபட்டால் காரியம் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்.

மூலவருக்கு பின்புறம்,பாலமரத்தடியில் சுக்குமலையாண்டவர் எழுந்தருளியுள்ளார்.குழந்தைகளுக்கு ஏற்பபட்ட கக்குவான் நோயை தீர்த்ததாக கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதித்தமலை&oldid=2723384" இருந்து மீள்விக்கப்பட்டது