கதம்ப உரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருநிற கதம்பவுரு ரோஜாப்பூ

உயிரினங்களின் உறுப்புகளில் உள்ள சில பகுதிகள் திடீரென்று சில மாற்றம் பெரும். இதற்கு உடல்சடுதி மாற்றம் என்று பெயர். இதன் விளைவாக ஒரு சிறிய பகுதி ஏனைய பகுதியை விட மாறுபட்டு காணப்படும் நிலையே கதம்ப உரு ( chimera) எனப் படும். இது பகுதிக் கதம்ப உரு, மிகை கதம்ப உரு, விளிம்பு வட்டக் கதம்ப உரு, குரோமோசோம் கதம்ப உரு என நான்கு வகைப்படும்.

பகுதிக் கதம்ப உரு[தொகு]

ஓர் உறுப்பில் மரபியலால் மாறுபட்ட திசுக்கள் காணப்படுகின்றன. நெல்லின் சில பூ வகைகளில் இளஞ்சிவப்பு உமியும், பச்சை நிற உமியும் உள்ளன. இவற்றை கலப்புச் செய்து பார்த்த போது ஒரே மஞ்சரியில் சில பூக்கள் இளஞ் சிவப்பு நிறமாகவும், வேறு சில பச்சை ஆகவும் இருந்தன.நெல், சோளம்,கம்பு ஆகியவற்றின் தண்டு, இலைகளில் பச்சை, வெள்ளை ஆகிய பகுதிகளில் கதம்ப உருக்களைக் காணலாம். கண்டங்கத்திரி, மணத்தக்காளி ஆகியவற்றை கலந்த போது அவற்றின் ஒரு பகுதி கண்டங்கத்திரி போலவும் மற்றொரு பகுதி மணத்தக்காளி போலவும் இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கதம்ப_உரு&oldid=3523608" இலிருந்து மீள்விக்கப்பட்டது