உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணாம்மூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணாம்மூச்சி அல்லது ஒளிந்து பிடித்தல் என்பது ஓடிப் பிடித்தல் போன்ற ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். ஒருவர் அல்லது சிலர் ஒளிய, ஒருவர் அல்லது சிலர் அவர்களை கண்டுபிடுத்தல் இந்த விளையாட்டு ஆகும். இரண்டு பேர் முதற்கொண்டு எத்தனை பேரும் இதை விளையாடலாம்.

கண் பொத்துதல்

சிறிவர் சிறுமியர் விளையாட்டு. தளர்நடைப் பருவத்தில் குழந்தைகளைத் தாய்மார் கண்ணாம்பூச்சி விளையாடச் செய்து நடை பழக்குவர். இது கண்ணாமூச்சி என மருவியும் வழங்கப்படும்.

கண்ணன் காட்டி விளையாடிய அப்பூச்சி விளையாட்டைப் பெரியாழ்வார் அப்பூச்சி காட்டியருளே எனப் பாடுகிறார். இந்தக் கண்ணன் பூச்சி விளையாட்டு கண்ணாம்பூச்சி என ஆகிப் பின்னர் கண்ணாம்மூச்சி > கண்ணாமூச்சி என மருவியது. கண்ணன் தன் நிழலைக் காட்டி ஆடிய நிலை மாறி, கண்ணை மூசிக்கொண்டவர் (பொத்திக்கொண்டவர்) பிறர் நிழலை நிலா வெளிச்சத்தில் அடையாளம் கண்டு அவரைத் தொடும் விளையாட்டாக மாறியுள்ளது.

விளையாடும் முறை

[தொகு]

தாய்ச்சி பொத்தியாளாக இருந்து குழந்தையின் கண்ணைப் பொத்திக்கொண்டு பாடுவார். பாட்டு முடிவதற்குள் மற்றவர்கள் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டும். தாய்ச்சி தன் பாட்டு முடிந்ததும் குழந்தையின் கண்ணைத் திறந்து விட்டுவிடுவார். குழந்தை ஒளிந்திருப்பவரைக் கண்டுபிடிக்கவேண்டும். கண்டுபிடித்துவிட்டால் கண்டுபிடிக்கப்பட்டவர் கண் பொத்தப்படும். குழந்தை தேடும்போது ஒளிந்துகொண்டிருப்பவர் ஓடிவந்து பொத்திய தாய்ச்சியைச் தொடுவர். அவ்வாறு தொடுவதற்குள் தொடப்பட்டாலும் அவரது கண் பொத்தப்படும்.

தற்காலத்தில் தாய்ச்சி இல்லாமலும் இது விளையடப்படுகிறது. சிறிவர் சிறுமியர்களுள் ஒருவர் ஒன்று முதல் குறிப்பிட்ட எண்கள் வரை (எ.கா 50 வரை) எண்ண அவர் எண்ணி முடிக்கும் முன்பு மற்றவர்கள் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டும். பிறகு எண்களைச் சொன்னவர் தேடிக்கண்டுபிடிக்கும் முதல் நபர் தோற்றவராவார்.தோற்றவர் பின்னர் எண்களைச் சொல்ல விளையாட்டு தொடரும்.

பாடல்

[தொகு]

தாய்ச்சியும் பொத்திக்கொள்பவரும் பாடும் பாடல்

[தொகு]
தாய்ச்சி கண் பொத்திக்கொள்பவர்
கண்ணாமூச்சியாரே ஊம் ஊம் ஊம்
எத்தனை முட்டை இட்டே மூணு முட்டை இட்டேன்
ஒரு முட்டையைத் தின்னுபுட்டு

ஒரு முட்டையைப் புளித்த தண்ணியிலே போட்டுப்புட்டு
ஒரு முட்டையைக் கொண்டுவா

சைவர் பாடல்

[தொகு]
தாய்ச்சி கண் பொத்திக்கொள்பவர்
கண்ணாமூச்சியாரே ஊம் ஊம் ஊம்
எத்தனைப் பழம் பறித்தீர் மூணு பழம் பறித்தேன்
ஒரு பழத்தைப் புள்ளையாருக்குப் படைத்துவிட்டு

ஒரு பழத்தைத் தின்னுபுட்டு
ஒரு பழத்தைக் கொண்டுவா

மேலும் பார்க்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]
  1. ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழக வெளியீடு, 1954
  2. கி. ராஜநாராயணன், வட்டார வழ்க்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல், 627 716, 1982

பார்க்க

[தொகு]
கண்ணாம்மூச்சி
தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)
அப்பூச்சி காட்டுதல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாம்மூச்சி&oldid=2740575" இலிருந்து மீள்விக்கப்பட்டது