கண்ணத்தாங்குடி மலையேறியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்ணத்தாங்குடி மலையேறியம்மன் கோயில் என்பது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணத்தாங்குடி என்ற கிராமத்திலுள்ள அம்மன் கோவிலாகும்.[1][2]

தல புராணம்[தொகு]

ஓர் கனமழைக் காலத்தில் ஊரைச் சுற்றி வெள்ளம் ஏற்பட்டதாகவும், அப்போது மக்கள் மேடான பகுதிக்கு சென்றுவிட, வெள்ளத்தில் ஒரு கற்சிலை மிதந்து வந்ததாகவும் கூறுகின்றனர். அச்சிலையை மலையேறியம்மன் என்று பெயரிட்டு வணங்கிவருகிறார்கள்.

பெயர்க்காரணம்[தொகு]

ஊரின் மேற்கில் உள்ள மலையைக் கடந்து இந்தச் சிலையை வெள்ளம் அடித்து வந்ததால் இதற்கு மலையேறியம்மன் என்று பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர்.

வழிபாட்டு முறை[தொகு]

இந்த அம்மனுக்கு சித்திரை மாதம் மூன்றாவது வாரத்தில் காப்பு கட்டுகின்றனர்.வைகாசி மாதம் முதல் திங்கள் கிழமை நடு இரவில் பலியிடுதல் நடைபெறுகிறது .பலியிடுவதற்கான ஆட்டுக்கிடாய் திருடியதாக இருக்க வேண்டுமென்பது அய்தீகம். அதனால் இரண்டு நாள்களுக்கு முன்பாகவே வெளியூர்களுக்குச் சென்று ஆட்டுக்கிடாயைத் திருடி வருகின்றனர். அன்றிரவு அம்மனை அலங்கரித்து,ஊரின் நான்கு எல்லைக்கும் எடுத்துச்சென்று கிடாய்கள் வெட்டுகின்றனர். இறுதி நாள் அதாவது 22ஆம் நாள் சிலை(அம்மன்) பிறந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அச்சிலை கிடைத்த பகுதியில் சோழகர் என்ற பெயர் பெற்றவர்கள் வசித்து வருகிறனர். அவர்கள் ஒரு மண்பானை நிறையப் பாக்கு வைத்து அம்மனை வரவேற்கிறார்கள். மறுநாள் கோயிலை நோக்கி அம்மனை எடுத்துச் செல்கின்றனர். அதை மறு செவ்வாய் வழிபாடு என்று கூறுகின்றனர். அம்மன் பிறந்த வீட்டிற்கு வரும்போது மகிழ்ச்சியாக முகம் மலர்ந்திருபதாகவும் கோயிலுக்குத் திரும்பவும் எடுத்துச்செல்லும்போது முகம் வாடி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]