கண்டோனிசு எண்கள்
கண்டோனிசு எண்கள் (Cantonese Numbers) என்பது எண்ணிக்கையை கணக்கிட உலகில் பொதுவாக ஏனைய சமூகம் பயன்படுத்தும் இலக்க எண்ணுருக்களைத் தான் கொண்டுள்ளனர். ஆனால் கண்டோனிசு மொழியில் இலக்கங்களை எண்ணும் முறைமை அல்லது உச்சரிக்கும் முறைமை, உலகின் சீன மொழிக்குடும்பத்தைச் சாராத ஏனைய மொழியினரில் இருந்து முற்றிலும் வேறுபட்ட விதிமுறையைக் கொண்டுள்ளது. இதனை ஏனைய நாட்டவர்களால் ஒரு சுவையான விடயமாகவும் பார்ப்பதுண்டு. அதேவேளை இவ்விதிமுறையின் படி கண்டோனிசு மொழியில் எண்களை எளிதாகக் கற்றுக்கொள்ளலாம் எனக் கூறுவோரும் உளர்.
இருப்பினும் இது தமிழ் எண்ணிக்கையை எண்ணும் விதிமுறையில் இருந்தும் முற்றிலும் வேறுபட்ட முறைமாகும்.
1 முதல் 10 வரை
[தொகு]| இலக்கம் | ப.ஒ.அ முறை | தமிழில் |
|---|---|---|
| 1 | yāt | ஒன்று |
| 2 | yih | இரண்டு |
| 3 | sāam | மூன்று |
| 4 | sei | நான்கு |
| 5 | ńgh | ஐந்து |
| 6 | luhk | ஆறு |
| 7 | chāt | ஏழு |
| 8 | baat | எட்டு |
| 9 | gáu | ஒன்பது |
| 10 | sahp | பத்து |
| 0 | Lihng | பூச்சியம் |
11 முதல் 20 வரை
[தொகு]தமிழ் மற்றும் ஏனைய மொழிகளில் எண்களை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு,ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து என்றே எண்ணப்படுகின்றது. அவ்வாறே கண்டோனிசு மொழியிலும் எண்ணப்படுகின்றது. ஆனால் பத்துக்கு பிறகு பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று என எண்ணும் விதிமுறைகள் தான் ஏனைய மொழிகளும், தமிழ் மொழியும் கொண்டுள்ளன. ஆனால் சீன மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளில் பத்துக்கு பிறகு, பத்து + ஒன்று, பத்து + இரண்டு, பத்து + மூன்று என ஒவ்வொரு இலக்கங்களையும் தனித்தனியே பிரித்து பிரித்து கூறும் வழக்கு காணப்படுகின்றது. கண்டோனிசு மொழி வழக்கும் அப்படித்தான்.
| இலக்கம் | ப.ஒ.அ முறை | கண்டோனிசு முறை | தமிழ் முறை |
|---|---|---|---|
| 11 | sahp + yāt | பத்து + ஒன்று | பதினொன்று |
| 12 | sahp + yih | பத்து + இரண்டு | பன்னிரண்டு |
| 13 | sahp + sāam | பத்து + மூன்று | பதின்மூன்று |
| 14 | sahp + sei | பத்து + நான்கு | பதினான்கு |
| 15 | sahp + ńgh | பத்து + ஐந்து | பதினைந்து |
| 16 | sahp + luhk | பத்து + ஆறு | பதினாறு |
| 17 | sahp + chāt | பத்து + ஏழு | பதினேழு |
| 18 | sahp + baat | பத்து + எட்டு | பதினெட்டு |
| 19 | sahp + gáu | பத்து + ஒன்பது | பத்தொன்பது |
| 20 | yih + sahp | இரண்டு + பத்து | இருபது |
21 முதல் 30 வரை
[தொகு]தமிழில் இருபதுக்கு பிறது, இருபத்தியொன்று, இருபத்திமூன்று என எண்ணிக்கை முறை அமையும். ஆனால் கண்டோனிசு மொழியில் "இருபது" என்பதை "இரண்டு + பத்து" என அழைக்கப்படும். அத்துடன் "இருபத்தி ஒன்று" என்பதனை "இரண்டு + பத்து + ஒன்று" என்றே கூறுவர். அவ்வாறே அதன் பின்னரான எண்ணிக்கைகளும் அமைகின்றன.
| இலக்கம் | ப.ஒ.அ முறை | கண்டோனிசு முறை | தமிழ் முறை |
|---|---|---|---|
| 21 | yih + sahp + yāt | இருபது + பத்து + ஒன்று | இருபத்தியொன்று |
| 22 | yih + sahp + yih | இருபது + பத்து + இரண்டு | இருபத்திரண்டு |
| 23 | yih + sahp + sāam | இருபது + பத்து + மூன்று | இருபத்திமூன்று |
| 24 | yih + sahp + sei | இருபது + பத்து + நான்கு | இருபத்திநான்கு |
| 25 | yih + sahp + ńgh | இருபது + பத்து + ஐந்து | இருபத்தைந்து |
| 26 | yih + sahp + luhk | இருபது + பத்து + ஆறு | இருபத்தாறு |
| 27 | yih + sahp + chāt | இருபது + பத்து + ஏழு | இருபத்தேழு) |
| 28 | yih + sahp + baat | இருபது + பத்து + எட்டு | இருபத்தெட்டு |
| 29 | yih + sahp + gáu | இருபது + பத்து + ஒன்பது | இருபத்தொன்பது |
| 30 | sāam + sahp | மூன்று + பத்து | முப்பது |
30 முதல் 100 வரை
[தொகு]முப்பதை மூன்று + பத்து என்று அழைப்பதைப் போன்றே, மூன்று + பத்து + ஒன்று, மூன்று + பத்து + இரண்டு, மூன்று + பத்து + மூன்று, மூன்று + பத்து + நான்கு என எண்ணிக்கை தொடரும்.
| இலக்கம் | ப.ஒ.அ முறை | கண்டோனிசு முறை | தமிழ் முறை |
|---|---|---|---|
| 30 | sāam + sahp | மூன்று + பத்து | முப்பது |
| 40 | sei + sahp | நான்கு + பத்து | நாற்பது |
| 50 | ńgh + sahp | ஐந்து + பத்து | ஐம்பது |
| 60 | luhk + sahp | ஆறு + பத்து | அறுபது |
| 70 | chāt + sahp | எழு + பத்து | எழுபது |
| 80 | baat + sahp | எட்டு + பத்து | என்பது |
| 90 | gáu + sahp | ஒன்பது + பத்து | தொன்னூறு |
| 100 | yāt + baak | ஒன்று + நூறு | நூறு |
கண்டோனிசு மொழியில் "நூறு" என்பதை "ஒன்று + நூறு" என்பர். அவ்வாறே ஏனைய எண்ணிக்கைகளையும் கூறப்படுகின்றது.
100 முதல் 300 வரை
[தொகு]| இலக்கம் | ப.ஒ.அ முறை | கண்டோனிசு முறை | தமிழ் முறை |
|---|---|---|---|
| 100 | yāt + baak | ஒன்று + நூறு | நூறு |
| 200 | yih + baak | இரண்டு + நூறு | இருநூறு |
அவ்வாறே நான்கு + நூறு, ஐந்து + நூறு என தொடரும்.
1000 முதல் 3000 வரை
[தொகு]"ஆயிரம்" என்பதனையும் ஒன்று + ஆயிரம், இரண்டு + ஆயிரம், மூன்று + ஆயிரம் எனக் கூறப்படுகின்றது.
| இலக்கம் | ப.ஒ.அ முறை | கண்டோனிசு முறை | தமிழ் முறை |
|---|---|---|---|
| 1000 | yāt + chīn | ஒன்று + ஆயிரம் | ஒராயிரம் (ஆயிரம்) |
| 2000 | yih + chīn | இரண்டு + ஆயிரம் | இரண்டாயிரம் |
| 3000 | sāam + chīn | மூன்று + ஆயிரம் | மூவாயிரம் |
10,000 முதல் 10,000,000 வரை
[தொகு]மூவாயிரத்தை "மூன்று + ஆயிரம்" என்பது போன்றே தொடர்ந்து "பத்தாயிரம்" என்பதை "ஒன்று + பத்தாயிரம்" என்று அழைக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து "இரண்டு + பத்தாயிரம்", "மூன்று + பத்தாயிரம்" என தொடரும்.
| இலக்கம் | ப.ஒ.அ முறை | கண்டோனிசு முறை | தமிழ் முறை |
|---|---|---|---|
| 10,000 | yāt + maahn | ஒன்று + பத்தாயிரம் | பத்தாயிரம் |
| 20,000 | yih + maahn | இரண்டு + பத்தாயிரம் | இருபதாயிரம் |
| 30,000 | sāam + maahn | மூன்று + பத்தாயிரம் | முப்பதாயிரம் |
| 100,000 | sahp + maahn | பத்து + பத்தாயிரம் | ஒரு இலட்சம் |
| 1,000,000 | yāt + baak + maahn | பத்து + நூறு + பத்தாயிரம் | பத்துலட்சம் |
| 10,000,000 | yāt + chīn + maahn | பத்து + ஆயிரம் + பத்தாயிரம் | ஒரு கோடி |
இதுவே கண்டோனிசு மொழியில் எண்ணிக்கைகளை கூறும் முறைமையாகும்; விதிமுறையும் ஆகும். இம்முறைமையே சீன மொழி குடும்பத்திற்கும் ஏனைய மொழி குடும்பங்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடாகும்.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- Cantonese Numbers counting காணொளி