கண்டியத்தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டியத்தேவர் என்ற பெயர் இராசராச சோழப் பேரரசரின் மகனாம் இராசேந்திர சோழப் பேரரசரின் சிறப்புப் பெயராகும். அப்போதைய இலங்கையின் தலைநகராம் கண்டி வரை படையெடுத்துச் சென்று வெற்றி கொண்டதால் 'கண்டியம்கொண்ட தேவர்' 'கண்டியம்கொண்ட சோழர்' 'கண்டியத்தேவர்' என்றெல்லாம் இராசேந்திர சோழர் சிறப்பிக்கப்பட்டார். அதன் அடையாளமாக இன்றும் செயங்கொண்ட சோழபுரத்திற்கு அருகாமையில் 'கண்டியங்கொல்லை' 'கண்டியங்குப்பம்' என ஊர்கள் உள்ளன. இதற்கு மேற்கோளாக கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதன் அருகாமையிலுள்ள ஊர்களையும் (கடாரங்கொண்டான்) எடுத்துக்கொள்ளலாம். மேலும் இதற்கு வலுவூட்டும் வகையில் செயங்கொண்ட சோழபுரத்திற்கு அருகாமையிலுள்ள அய்யப்ப நாயக்கன் பேட்டை என்ற சிற்றூரில் 'கண்டியத்தேவர்' என்ற பட்டப்பெயருடன் (வகையறா) பல குடும்பங்கள் வாழ்கின்றனர். இன்னும் சில கிராமங்களிலும் வாழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டியத்தேவர்&oldid=1674538" இருந்து மீள்விக்கப்பட்டது