கண்கட்டி
கண்கட்டி | |
---|---|
ஒத்தசொற்கள் | Sty, hordeolum[1] |
![]() | |
மேல் கண்ணிமையில் வெளிப்புறக் கண்கட்டி | |
பலுக்கல் |
|
சிறப்பு | கண் மருத்துவம், பார்வை அளவையியல் |
அறிகுறிகள் | கண்ணிமையின் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் வீங்குதல்[1] |
வழமையான தொடக்கம் | எந்த வயதினரும்[2] |
கால அளவு | சில நாட்கள் அல்லது வாரங்கள்[3] |
காரணங்கள் | ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் எனப்படும் பாக்டீரியாத் தொற்று[3] |
ஒத்த நிலைமைகள் | இமைநீர்க்கட்டி[4] |
சிகிச்சை | சூடான ஒத்தடம், நுண்ணுயிர் எதிர்ப்பி கண் களிம்பு[5][6] |
கண்கட்டி ( stye, also known as a hordeolum) என்பது கண் இமைகளில் உள்ள எண்ணெய் சுரப்பியில் பாக்டீரியா தொற்றால் ஏற்படுவதாகும்.[4] இதன் விளைவாக கண் இமையின் ஓரத்தில் சிவப்பு நிறத்தில் சிறு கட்டி ஏற்படும்.[1][5] இதனால் கண் இமையின் வெளிப்புறம் அல்லது உட்புறம் பாதிக்கபடலாம்.[3]
கண்கட்டி ஏற்பட பொதுவாக ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் என்னும் பாக்டீரியா தொற்று ஏற்படுவதால் உண்டாகிறது.[3] [6] உள்ளே ஏற்படும் கண்கட்டி மெய்போமியன் சுரப்பியில் ஏற்படும் தொற்றினாலும், வெளிப்புறக் கண்கட்டியானது ஜீசு சுரப்பியில் ஏற்படும் தொற்றின் காரணமாகவும் ஏற்படுகின்றது.[5] மறுபுறம், சலாசியன் என்னும் கண்கட்டியானது தொற்று இல்லாத நிலையில் மெய்போமியன் சுரப்பியில் ஏற்படும் அடைப்பினால் ஏற்படுவது ஆகும்.[4] சலாசியன் கண்கட்டி பொதுவாக கண்ணிமையின் நடுவில் இருக்கும், வலி இருக்காது. [5]
பெரும்பாலும் கண்கட்டியானது எவ்வித சிகிச்சையும் இல்லாமல் ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களில் தானாகவே சரியாகிவிடும்.[3] விரைவாக குணமாகவேண்டுமானால் சூடான ஒத்தடம் கொடுக்கலாம்.[5] கண்கட்டிகள் எந்த வயதிலும் ஏற்படலாம். [2]
அறிகுறிகள்
[தொகு]

கண்கட்டியின் முதல் அறிகுறி, கண்ணிமையின் புடைப்பின் மையத்தில் ஒரு சிறிய, மஞ்சள் நிறப் புள்ளி தோன்றும், அது சீழ் போல உருவாகி, அந்தப் பகுதியில் விரிவடையும். [7]
கண்கட்டியின் பிற அறிகுறிகள் பின்வருமாறு:
- மேல் அல்லது கீழ் கண்ணிமையில் கட்டி
- கண்ணிமையின் உள்ளே வீக்கம்
- அப்பகுதியில் வலி
- சிவத்தல்
- மென்மையடைதல்
- கண் இமை ஓரங்களின் மேலோடு உரிதல்
- கண் இமை தொங்கும் தன்மையை அடைதல்
- கண் இமையில் அரிப்பு ஏற்படுதல்
- மங்கலான பார்வை
- கண்ணில் பீழை வெளியேறுதல்
- கண் எரிச்சல் [8]
- கண் சிமிட்டும்போது அசௌகரியம் ஏற்படுதல் [9]
- கண்ணில் வெளிப் பொருள் ஒன்று இருப்பது போன்ற உணர்வு.
சிக்கல்கள்
[தொகு]
கண்கட்டி மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே சிக்கலாக மாறும். இருப்பினும், கண்கட்டியினால் ஏற்படும் மிகவும் பொதுவான சிக்கல் என்பது அழகு குறைபாடு, கருவிழியில் எரிச்சலை ஏற்படுத்தும் இமைநீர்க்கட்டியாக மாறுவதாகும். இவ்வாறானால் பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட வேண்டும்.[10] முறையற்ற அறுவை சிகிச்சையினால் சிக்கல்கள் ஏற்படலாம், மேலும் முக்கியமாக கண் இமை வளர்ச்சியில் இடையூறு, இமை சிதைவு அல்லது இமை புண் புரை ஆகியவை இச்சிக்கல்களில் அடங்கும். பெரிய கண்புரை ஒருவரின் பார்வையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இதையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Hordeolum (Stye)". PubMed Health. Archived from the original on 8 September 2017. Retrieved 14 October 2016.
- ↑ 2.0 2.1 Ferri, Fred F. (2016). Ferri's Clinical Advisor 2017: 5 Books in 1 (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 1219. ISBN 9780323448383. Archived from the original on 2016-10-18.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Non-surgical interventions for acute internal hordeolum". Cochrane Database Syst Rev 1 (1): CD007742. 2017. doi:10.1002/14651858.CD007742.pub4. பப்மெட்:28068454.Lindsley K, Nichols JJ, Dickersin K (2017). "Non-surgical interventions for acute internal hordeolum". Cochrane Database Syst Rev. 1 (1): CD007742. doi:10.1002/14651858.CD007742.pub4. PMC 5370090. PMID 28068454.
- ↑ 4.0 4.1 4.2 "Eyelid Disorders Chalazion & Stye". NEI. 4 May 2010. Archived from the original on 18 October 2016. Retrieved 14 October 2016.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 Carlisle, RT; Digiovanni, J (15 July 2015). "Differential Diagnosis of the Swollen Red Eyelid.". American Family Physician 92 (2): 106–12. பப்மெட்:26176369.
- ↑ 6.0 6.1 Deibel, JP; Cowling, K (May 2013). "Ocular inflammation and infection.". Emergency Medicine Clinics of North America 31 (2): 387–97. doi:10.1016/j.emc.2013.01.006. பப்மெட்:23601478.Deibel, JP; Cowling, K (May 2013). "Ocular inflammation and infection". Emergency Medicine Clinics of North America. 31 (2): 387–97. doi:10.1016/j.emc.2013.01.006. PMID 23601478.
- ↑ "What are the signs and symptoms of a sty?". Medicinenet இம் மூலத்தில் இருந்து 2010-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100407042355/http://www.medicinenet.com/sty/article.htm#tocc.
- ↑ "Stye Symptoms". Archived from the original on 2010-04-06. Retrieved 2010-04-06.
- ↑ "Symptoms". Archived from the original on 2010-03-07. Retrieved 2010-04-06.
- ↑ "Hordeolum and Stye: Follow-up". Archived from the original on 2010-04-09. Retrieved 2010-04-06.