கணிப்புக் குலக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதவியலில், கணிப்புக் குலக் கோட்பாடு (computational group theory) என்பது கணினிவழிகுலங்களை ஆயும் கோட்பாடாகும். இது குலங்கள் பற்றிய தகவலைக் கணிக்க படிநிலைநிரல்களையும் தரவுக் கட்டமைப்புகளையும்வடிவமைத்து பகுப்பாய்வு செய்தலாகும்மிந்த புலத்தில் ஆர்வம் மூன்டதற்கான காரணம், பெரும்பாலான வட்டாரக் குலங்கள் உட்பட, பல ஆர்வமூட்டும் குலங்களுக்குக் கையால் கணக்கிடுதல் நடைமுறையில் இயலாமையே ஆகும்.

குலக் கோட்பாட்டின் முதன்மையான படிநிலைநிரல்கள் பின்வருமாறு:

  • ஒரு வரிசைமாற்று குலத்தின் ஒழுங்கைக் கண்டறிவதற்கான சுக்கிரையர்-சிம்சு படிநிலைநிரல்
  • துணைக்கண எண்ணுவதற்கான தாடு-கொக்சுட்டர் படிநிலைநிரல், நுத-பெண்டிக்சு படிநிலைநிரல்
  • ஒரு குலத்தின் தற்போக்கு உறுப்புகளைக் கண்டறிவதற்கான பெருக்கல் பதிலீட்டுப் படிநிலைநிரல்

குலக் கோட்டில் பயன்படுத்தும் இரண்டு முதன்மையான கணினி இயற்கணித முறைகள் பின்வருமாறு:

GAP கணினி இயற்கணித முறை, மாக்மா கணினி இயற்கணித முறை.

வரலாற்றியலாக, பான்மைக் கோட்பாட்டுக்கான கணினி இயற்கணித முறையும் மாக்மா முன்னோடியான காய்லே கணினி இயற்கணித முறையும் இன்றியமையாதவை.

இப்புலத்தின் பெறுமதிகள் பின்வருமாறு:

  • 2000 ஒழுங்குக்கும் கீழான அனைத்து வரம்புறு குலங்களையும் முழுமைஆக எண்ணுதல்
  • அனைத்து வட்டாரக் குலங்களுக்கான குல உருவகங்களைக் கணித்தல்

மேற்கோள்கள்[தொகு]