கணினி வழியாகக் கற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினி-வழி மொழிப் பாடம் கற்றல் (Computer-assisted language learning (CALL) அல்லது Computer-Aided Instruction (CAI) அல்லது Computer-Aided Language Instruction (CALI)) முறையில் மாணவர் தாமே கற்றலை நிகழ்த்துவர். எனவே இது தனிநபர் கற்றல் அல்லது தனிப்பட்ட கற்றல் என்றும் அழைக்கப்படும். தனிப்பட்ட கற்றல் என்பது கற்பவருக்கும் கற்றலுக்குமான உறவை பலப்படுத்துவதாகும். கல்வியல் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் தனிப்பட்ட கற்றல் இன்றியமையாத ஒன்று. இது மாணவர்கள் தங்களுக்கு முடிந்த அளவில் சுயமாக கற்கும் பயிற்சி அளிக்கிறது. நவீன வகுப்பறைகளில் இன்றைய காலத்தில் அனைத்துப் பிரிவு மாணவர்களும் உள்ளனர். அத்தகைய சூழலில் அனைத்து மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியரால் சிறப்பாகக் கற்றுக் கொடுக்க முடியாது. இத்தகு நிலையில் தனிநபர் கற்றல் என்பது புதிய முறையில், சுயமாகக் கற்கும் பழக்கத்தை வழங்கி மாணவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற வகையில் கற்று, பன்முறை கற்றலை நிகழ்த்திச் சிறப்படையவும்; ஆசிரியர் தனியாகவும் அதே நேரத்தில் ஒரு குழுவிற்கும் பயிற்சியளித்து வெற்றியடையச் செய்வதற்கும் இம்முறை உதவுகின்றது. ஓர் ஆர்வமிக்கமாணவன் தன் கற்றல் சூழுலுக்கு ஏற்றவாறு ஒரு குறிப்பிட்டப் பாடத் தலைப்பையும், தனித்திறனையும் தேர்ந்தெடுத்து விருப்பம்போல் கற்றுக் கொள்ளலாம். கற்றலில் பின்தங்கிய மாணவர்களும் தங்கள் சுயகற்றல் திறனுக்கு ஏற்பப் பன்முறை கற்றலை நிகழ்த்திக் கல்வியில் சிறக்கலாம். ஒரு சராசரி மாணவன் பாடப் பொருளை எளிதாகக் கற்ற பின்னர், அதன் தொடர்பான பல்வேறு தகவல்களைச் சுயமாகக் கற்றுக் கொண்டு கல்வியில் முன்னேற்றம் அடையலாம்.

கல்வியில் கணினியின் பண்பு:

கணினி, கல்வியில் பல புதுமைகளைப்  புகுத்தியுள்ளது. அவற்றில் சில பின்வருமாறு:

1.         பள்ளிக்கூடங்களில், மாணவர்களின் திறமையை அறிய தேர்வு நடத்தி, முடிவுகளுக்கு ஏற்றவாறு அவர்களை வகைப்படுத்தி, அவர்களுக்கு ஏற்ற கால அட்டவணைகளைத் தயாரிக்கவும் பயன்படுகின்றது.

2.         கணினி, கற்பவர்  தனியாகவும், குழுவாகவும் கற்க உதவுகின்றது.

3.         கணினிகள் மாணவர்களின் தரப்பட்டியலைத் தயாரித்து, அவைகளை மறைவாகப் பாதுகாக்கின்றது.

4.         கணினி அவரவருக்குத் தேவையான தகவல்களை எளிதாக அறிந்து கொள்ள உதவுகின்றது.

5.         இவை மாணவர்களுக்கும், அவர்களின் கற்றல் பொருள்களுக்கும் பாலமாக இருந்து, உரையாடல் வழிக் கற்றலுக்கு வழி செய்கின்றது.

6.         மாணவர்களுக்குத் தேவையான பேச்சுப் பயிற்சி மற்றும் எழுத்துப் பயிற்சியை நிறைவாக வழங்குகின்றது.

கற்றல் - கற்பித்தலில் கணினிநுட்பக் கருவியின் பயன்:[தொகு]

1.        பங்கேற்பின் மூலம் கற்றுக் கொள்ள மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது.

2.       கற்பிக்கும் பொருளின் உண்மைத் தன்மையை உணர உதவுகின்றது.

3.       ஒவ்வொரு செயலிலும் கருத்துருவாக்கம் ஏற்பட உதவுகின்றது.

4.       திட்டமிடவும், செய்து பார்க்கவும் தூண்டும் வகையில் அமைகின்றது.

5.       கற்றலை மேம்படுத்தி நினைவில் நிறுத்திக் கொள்ள உதவுகின்றது.

6.       தானே செய்து கற்பதால் உண்மை அனுபவத்தைக் கொடுப்பதோடு, தன்னம்பிக்கை வளரவும் உதவுகின்றது.

7.       கருத்க்ச் சார்ந்த தொடர் சிந்தனையைத் தூண்டிக் கல்வியறிவைப் பெற வழி வகுக்கின்றது.

8.       கருத்துச் சார்ந்த படம் மனதில் பதிவாகித் திரும்பச் சரியான தகவலைக் கூற உதவுகின்றது.

9.       பெற்றுக் கொண்ட அனுபவமானது, நடைமுறையில் உண்மையென்று கொள்ளத்தக்க அறிவைப் பெற உதவுகின்றது.

10.    மனதளவிலும் உடலளவிலும் செயல்படுத்த வேண்டும் என்ற ஊக்கம் பெற உதவுகின்றது.

11.    குறைந்த நேரத்தில் சரியான நினைத்த கற்றல் ஏற்பட உதவுகின்றது.

கணினி வழிக்கற்றல் நுட்பப் பயன்பாட்டில் சூழல் மாற்றம்:[தொகு]

1.     ஓர் ஆசிரியர், ஆசிரியர் என்ற தன் பங்கிலிருந்து கற்றலை எளிதாக்குபவராகவும், அனுபவமிக்க நம்பிக்கையான செயலாளராகவும் மாறுகிறார்.

2.     மாணவர்கள் சுறுசுறுப்பான பங்கேற்பாளராக மாறுகின்றார்.

3.     ஒவ்வொரு கற்றல் - கற்பித்தல் செயலும் அதிகமான விளக்கங்கள் நிறைந்ததாகவும், கருத்தாழம் மிக்கதாகவும் மாறுகின்றது.

4.     தகவல் பெறும் விளக்கங்களுக்கான வாய்ப்புகள் குறிப்பிட்ட இலக்கை நோக்கி விரிவடைகின்றன.

5.     மாணவர்கள் அதிகச் சுதந்திரத்துடன் செயல்படுகின்றனர்.

6.     ஆசிரியர் மாணவர்கள் இடைவினை சம அளவிலும் நேரிடையாகவும் கிடைக்கிறது.

7.     ஆசிரியர் மாணவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றம் அதிகரிக்கின்றது.

8.     கல்வி மாணவர்கள் மையமாக மாறுகின்றது.

9.     கற்றல் அவரவர் கற்கும் திறமைக்கு ஏற்றவாறு அமைகின்றது.

10.  அனைத்து மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புச் சமமாக்கப்படுகின்றது.

11.  தனிமாணவருக்கும் -மற்ற மாணவர் குழுக்களுக்குமிடையே கருத்துப் பரிமாற்றம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கிறது.

12.  கற்பித்தலும், கற்றலும் வலுவடைகின்றன.


உதவிய புத்தகங்கள்/இணையதளங்கள்:

  1. Mangal S.K., “Educational Technology”, University Science Press, 113, Garden House, Daryaganj, New Delhi – 110002.
  2. Wiersma, W.(1991). Research methods in Education (5th ed.). Needlam Height , MA: Allyn and Bacon.