கணினியின் தலைமுறைகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நாளும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் கணினியினாது, பெரிய அளவிலான பல தலைமுறைகளாக பரிணாம வளர்ச்சியடைந்தே இன்றைய நிலையை அடைந்து உள்ளது.இன்றைய கணினி அளவில் மிக சிறியதாகவும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மிகவும் இலகுவாக இயக்கக்கூடியதாகவும் உள்ளது ஆனால் அன்றைய கணினி அளவில் மிகப் பெரியதாகவும் ஒரு சில வேலைகளை மாத்திர கன்னி மிகச் சிரமத்தின் மத்தியில் ஆற்றக்கூடியதாக இருந்தது. கணினியின் வளர்ச்சியை 5 தலைமுறைகளாக தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பிரிக்கலாம், நாம் தற்போது பார்ப்பது நான்கம் தலைமுறை கணினியாகும், எதிர்கால வளர்ச்சிக்காக ஐந்தாம் தலைமுறை கணினி ஒதுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தலைமுறைகளாகப் பார்ப்போம். முதலாம் தலைமுறை கணினி (1940 -1956) தொழில் நுட்பம் : வெற்றிடக் குழாய் (Vacuum tube) நினைவகம் : காந்த உருளை மொழி : இயந்திர மொழி (Machine language) உள்ளீட்டு முறை : துளை அட்டைகள்,காகித நாடக்கள் வெளியீட்டு முறை : அச்சுப்பொறி
பாகங்கள் ஒரு சமயத்தில் ஒரு கணிப்பை மட்டும் செய்யும் அளவில் பெரிது, அதிக வெப்பத்தை ஏற்படுத்தின இயக்குவதற்கு அதிகளவு மின்சாரம் தேவைப்பட்டது அதிகளவு வெப்பம் உருவானதால் கணினியின் பாகங்கள் அடிக்கடி பழுதுபட்டன. கணினியின் பெயர்கள் : UNIVAC (Universal Automatic Computer), யுனிவர்சல் ஆட்டோமேட்டிக் கம்ப்யூட்டர்- UNIVAC I 5200 வெற்றிடக் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன, 13 மெற்றிக் தொன் நிறை, 125 கிலோ வோல்ட் மின்சாரம் உபயோகிக்கப்பட்டது, 1,905 இயக்கங்கள் ஒரு வினாடியில் இடம்பெறும், 35.5 சதுர அடி இடப்பரப்பு தேவைப்பட்டது. ENIAC (Electronic Numerical Integrator And Computer) - 30 மெற்றிக் தொன் நிறை, 18,000 வெற்றிடக் குழாய்கள் பயன்படுத்தப்பட்டன.