கணித பெட்டி கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கணித பெட்டியின் கருவிகள் என்பவை மாணவர்கள் கணிதத்தில் வடிவியலுக்காக பயன்படுத்தும் கணிதப் பெட்டியில் உள்ள பொருட்களைக் குறிப்பதாகும். கணிதப் பெட்டியில் உள்ள பொருட்களும் அவற்றின் பயன்களும் கீழ்கண்டவாறு,

  1. . அளவுகோல்: ஒரு விளிம்பு சென்டி மீட்டரிலும், மற்றொரு விளிம்பு அங்குல அளவிலும் குறிக்கபட்டிருக்கும். இதனைக்கொண்டு கோடுகள் வரையலாம் மற்றும் கோட்டுதுண்டுகளின் நீளங்களை அளக்கலாம்.
  1. . கவராயம்: ஒரு பக்கம் கூரிய முனையும் மறு பக்கம் பென்சில் பொருத்தகூடிய கருவியாகும். இதனைக்கொண்டு வட்டம் வரையலாம் மற்றும் வட்ட பகுதியை வரையலாம்.
  1. . கவை: இரு பக்கங்களும் கூரிய முனைகளை கொண்டிருக்கும் ஒரு கருவியாகும். இதனைக்கொண்டு கோட்டுதுண்டுகளின் நீளங்களை அளக்கலாம் மற்றும் ஒப்பிடலாம்.
  1. . கோணமானி: அரைவட்ட வடிவில் இரு புறமும் பூஜ்ஜியம் பாகையில் தொடங்கி நூற்றி என்பது பாகையில் குறிக்கபட்டிருக்கும். இதனைக்கொண்டு கோணங்களை அளக்கலாம் மற்றும் வரையலாம்.
  1. . மூலை மட்டங்கள்: அ). 45 பாகை, 45 பாகை மற்றும் 90 பாகை கோண அளவுகளை கொண்ட மூலை மட்டம். ஆ). 30 பாகை, 60 பாகை மற்றும் 90 பாகை கோண அளவுகளை கொண்ட மூலை மட்டம். இவைகளை கொண்டு செங்குத்து மற்றும் இணை கோடுகள் வரையலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழக அரசு வெளிட்ட ஆறாம் வகுப்பின் முதல் பருவத்தின் இரண்டாம் தொகுதியின் 69 ஆம் பக்கம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித_பெட்டி_கருவிகள்&oldid=3206423" இருந்து மீள்விக்கப்பட்டது