கணக்கர் (இலக்கியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணக்கை எழுதுவோர் கணக்கர் (ஒலிப்பு) எனப்பட்டனர். பல்வேறு வகைப்பட்ட கணக்கர்களைப் பற்றி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அவற்றுள் சில கணக்கர்கள்

  1. ஓலைக் கணக்கர்
  2. நாழிகைக் கணக்கர்
  3. மந்திரக் கணக்கர்
  4. சமயக் கணக்கர்
  5. அமயக் கணக்கர்
  6. ஆசிரியக் கணக்கர்
  7. பெருங்கணக்கர்
  8. கணக்கியல் வினைஞர்
  9. காலக்கணிதர்
  10. ஆயக்கணக்கர்
  11. வேட்டுவக் கணக்கர்

வானியல் கணக்குகளைக் கணக்கிட்டவர்கள் நாழிகைக் கணக்கர் என்று அழைக்கப்பட்டனர். இதை “வானோக்கிக் காலக் கணக்கை அறிந்தனர் நாழிகைக் கணக்கர்” என குறுந்தொகை (261: 6-7) தெரிவிக்கிறது. அப்பொழுதளந்தறியும் பொய்யா மாக்கள் குறுநீர்க் கன்னல் என்ற கருவியைப் பயன்படுத்தினர்.(முல்லை 55-58, அகம் 43-6, மதுரை கா 670-71) அதனால் இந்தக் கணக்கர்கள் யாமத்தைக் கணக்கிட்டுக் கூறினர். நாழிகை கொண்டு யாமத்தையும், ஆண்டுகளை எண்ணி ஊழியையும் கணக்கிட்டனர் என்பதை மணிமேகலை, நாண்மணி ஆகியவை மூலம் அறிந்து கொள்ள் முடிகிறது. வேட்டுவ கணக்கர் காலத்தை அளக்கும் சோழி பிரசன்னம், குறி சொல்லுதல், ஆட்சிமுறை பற்றிய வழிகளை சொல்லித்தந்து வேட்டுவ மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினர். பல்வேறு காலகட்டத்தில் எதிரி நாட்டு மன்னர்களும் இவர்களிடம் கப்பம் செலுத்திய குறிப்புகளும் உள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cahan, Steven F.; Sun, Jerry (2014-08-11). "The Effect of Audit Experience on Audit Fees and Audit Quality" (in en). Journal of Accounting, Auditing & Finance 30 (1): 78–100. doi:10.1177/0148558x14544503. 
  2. Friedman, A. L., & Lyne, S. R. (2001). The beancounter stereotype: towards a general model of stereotype generation. Critical perspectives on accounting, 12(4), 423-451.
  3. Jeacle, I., Miley, F., & Read, A. (2012). Jokes in popular culture: the characterisation of the accountant. Accounting, Auditing & Accountability Journal.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணக்கர்_(இலக்கியம்)&oldid=3889776" இலிருந்து மீள்விக்கப்பட்டது