கட்டளைக் கலிப்பா
கட்டளைக் கலிப்பா யாப்பிலக்கணம் கூறும் செய்யுள் பாங்குகளில் ஒன்று. விருத்தம் போன்ற அமைப்பினை உடைய இந்தப் பாவானது நான்கு அடிகளைக் கொண்டிருக்கும். அந்த அடிகள் வரையறுத்த எழுத்து எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. நேரசையில் பாடல் தொடங்கினால் 11 எழுத்துக்களையும், நிரையசையில் பாடல் தொடங்கினால் 12 எழுத்துக்களையும் அடி வரையறையாகக் கொண்டிருக்கும். [1]
பாடல் – எடுத்துக்காட்டு
[தொகு]ஆரசந் திரணத்து மண்டு மண்டி
- லாளரு வருத்துவிரு விருப்பாகியே
ஊரசந் திரவிற் பாதிசென்றுமே
- யிறங்கிலாண் மகட்கென் செய்வேனையா
தீரசந் திரகாவியிடக் கயா
- சிங்கவுத் தண்டத்தூர் தண்டனேரண
வீரசந் திரகிரி நகராதிபா
- வெங்கடேசுர வெட்டம ராஜனே. [2]
எழுத்துக்களை எண்ணும்போது மெய்யெழுத்தை விட்டுவிட்டு எண்ணுதல் வேண்டும். வேண்டுமேல் குற்றியலுகரம், குற்றியலிகரம் எழுத்துக்களையும் எண்ணிக்கையில் சேர்க்காமல் எண்ணுதல் வேண்டும்.
எழுத்து எண்ணும் பாங்கு - எடுத்துக்காட்டு
[தொகு]ஆ\1\ர\2\சந்\3\ தி\4\ர\5\ணத்\6\து\7\ மண்\8\டு\9\ மண்\10\டி\11\ (இது நேரசையில் தொடங்கிய அடி). நிரையசையில் தொடங்கிய பாடலை விக்கிமூலம் கடிகைமுத்துப் புலவர் பாடலில் காணலாம்.
அடிக்குறிப்பு
[தொகு]- ↑
கட்டளைக் கலிப்பாக் காட்டுங் காலை
யொருமாக் கூவிள மொருமூன் றியைய
நேர்பதி னொன்று நிரைபன்னீ ரெழுத்தாய்
நடந்தடிப் பாதியாய் நான்கடி யொத்தவாய்
வருவ தின்று வழங்கு நெறியே. யாப்பருங்கலம் நூற்பா 236 - ↑ கடிகைமுத்துப் புலவர் பாடல் 190