கடூம்பா நீர்வீழ்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடூம்பா நீர்வீழ்ச்சி
Katoomba Falls
KATOOMBA FALLS.jpg
2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கடூம்பா நீர் வீழ்ச்சியின் படம்
அமைவிடம்நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா
வகைஅடுக்கு வகை நீர்வீழ்ச்சி
நீர்வழிகெடூம்பா ஆறு

கடூம்பா நீர்வீழ்ச்சி (Katoomba Falls) ஆத்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் உள்ள ஓர் நீர்வீழ்ச்சியாகும். அடுக்கடுக்காக கீழிறங்கும் இந்த நீர்வீழ்ச்சி கெடூம்பா நதிக்கரையிலுள்ள கடூம்பா நகரத்தின் சுற்றுலா மையமான காட்சி முனைக்கு அருகில் அமைந்துள்ளது. கெடூம்பா நதி ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்திலுள்ள புளு மவுண்டெய்ன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள புளு மவுண்டெய்ன் தேசியப் பூங்காவிற்கு உட்புறத்தில் இருக்கும் யாமிசன் பள்ளத்தாக்கில் பாய்கிறது. நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சுற்றுலா பாதையில் அமைக்கப்பட்டுள்ல சுற்றுலா பூங்காவில் மின்மயமாக்கப்பட்ட மற்றும் மின்சார வசதியில்லாத முகாம் தளங்களும் சிற்றறைகளும் உள்ளன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Discover Katoomba Falls". Blue Mountains Tourist Parks. Blue Mountains City Council. பார்த்த நாள் 11 May 2014.

புற இணைப்புகள்[தொகு]

  • "Katoomba Falls". World of Waterfalls. Johnny T. Cheng (November 2006).