உள்ளடக்கத்துக்குச் செல்

கஜலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயிலில் உள்ள கஜலட்சுமி ஓவியம்

கஜலட்சுமி (Gajalakshmi) என்பவர் அட்ட லட்சுமிகள் எனும் எட்டுவகையான இலட்சுமிகளுள் ஒருவராவார். இவர் பாற்கடல் மதனம் எனும் நிகழ்வின் போது தோன்றியவள். அவ்வாறு தோன்றும் போது இருபுறம் யானைகள் வந்து அபிசேகம் செய்தன. இதனால் இவரை கஜலட்சுமி என்கின்றனர்.

கஜ என்றால் யானையாகும். தமிழில் இவரை வேழத்திரு என்று அழைக்கின்றனர். கால்நடைகள் மூலம் வளம் அருள்பவள்.[1] இவளே அரசரொக்கும் பெருஞ்செல்வங்கள் தருபவள்.[2] பாற்கடலிலிருந்து உதித்தவளும் இவளே! இருயானைகள் நீராட்ட[3] , அஞ்சேல், அருளல், தாமரைகள் தாங்கியவளாக செந்துகில் உடுத்து அருளுவாள்.

தியான ஸ்லோகம்

[தொகு]

சதுர்ப் புஜாம் த்விநேத்ராஞ்ச
         வராபய கராந் விதாம்
அப்ஜத்வய கராம்போஜாம்
         அம்புஜாசநஸமஸ்த்திதாம்
ஸஸிவர்ண கடேபாப் யாம்
         ப்லாவ்யமானாம் மஹாச்ரியம்
சர்வாபரண சோபாட்யாம்
         சுப்ரவஸ்த்ரோத்தரீயகாம்
சாமரக்ரஹ நாரீபி :
         ஸேவிதாம் பார்ச்வயோர்த்வயோ :
ஆபாதலம்பி வசநாம்
         கரண்ட மகுடாம் பஜே.

கஜலட்சுமி விளக்கு

[தொகு]

பித்தளையால் செய்யப்பட்ட விளக்கில் கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டதாக இருக்கும் விளக்கு கஜலட்சுமி விளக்காகும். இந்த விளக்கினை காமாட்சி விளக்கிற்கு பதிலாக பல்வேறு விசேசங்களுக்கும் செய்கின்றனர். [4]

இந்துக் கோயில்களில்

[தொகு]
தஞ்சை அரண்மனையில் உள்ள வாயிலின் மேல் வரையப்பட்டுள்ள கஜலட்சுமி ஓவியம்

இந்து சமயக் கோயில்கள் பலவற்றிலும் கஜலட்சுமிக்கு தனித்த வரவேற்பு உள்ளது. சிவாலயங்களில் கஜலட்சுக்கென தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து இந்து சமயக் கோயில்களிலும் கஜலட்சுமியை சன்னதியின் வாயிலில் புடைப்புச் சிற்பமாக வைத்துள்ளார்கள்.

அரண்மனைகள், வீடுகளின் நிலகால்கள் போன்றவற்றில் கூட கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்படுகிறது.

ஆதாரங்கள்

[தொகு]
  1. Flipside of Hindu Symbolism (Sociological and Scientific Linkages in Hinduism) by M. K. V. Narayan; published 2007 by Fultus Corporation; 200 pages; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59682-117-5; p.93
  2. Swami Chidananda. "The Eightfold Lakshmi".
  3. Vasudha Narayanan in: John Stratton Hawley, Donna Marie Wulff p.104
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-08. பார்க்கப்பட்ட நாள் 2016-09-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜலட்சுமி&oldid=3938741" இலிருந்து மீள்விக்கப்பட்டது