உள்ளடக்கத்துக்குச் செல்

கசுரகோ நடன விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கசுராகோ நடனத் திருவிழா (Khajuraho Dance Festival) என்பது மத்தியப் பிரதேச கலா பரிசாத் எனப்படும் கலை அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் நடனத் திருவிழாவாகும். பிரம்மாண்டமான ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கசுரகோ கோயில்களின் பின்னனியில் பாரம்பரிய நடனங்களுக்காக இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு இவ்விழா நடைபெறும். பொதுவாக பிப்ரவரி மாதம் 20 முதல் 26 வரை திருவிழா நடைபெறுகிறது.

இந்த கலாச்சார திருவிழாவில் கதக், பரதநாட்டியம், ஒடிசி, குச்சிபுடி, மணிப்பூரி, மற்றும் கதகளி போன்ற இந்திய பாரம்பரிய வகை நடனம்ஹ்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இந்நடனப் பாங்குகளின் செழுமையை வெளிப்படுத்தும் சிறந்த நடனக் கலைஞர்களின் நடனநிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெறுகின்றன. நவீன இந்திய நடனம் சமீபத்தில் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது[1].

திருவிழாவின்போது நடனங்கள் ஒரு திறந்தவெளி மேடையில் நிகழ்த்தப்படுகின்றன, வழக்கமாக சூரியக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சித்ரகுப்த கோயிலுக்கும், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விசுவநாத கோயிலுக்கும் முன்னால் இந்த திறந்தவெளி மேடைகள் அமைக்கப்படுகின்றன [2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-22. பார்க்கப்பட்ட நாள் 2017-07-17.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-22. பார்க்கப்பட்ட நாள் 2017-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுரகோ_நடன_விழா&oldid=3594154" இலிருந்து மீள்விக்கப்பட்டது