கங்கை ஆறு புத்துயிர்ப்புத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கங்கை ஆறு புத்துயிர்ப்புத் திட்டம் என்பது இந்தியாவில் ஓடும் கங்கை ஆற்றினை தூய்மைப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இந்திய நடுவண் அரசால் நிறுவப்பட்ட சுத்தமான கங்கைக்கான தேசிய இயக்கம் எனும் அமைப்பு, இத்திட்டத்தை இயக்குகிறது. குமுகாய அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ள இவ்வமைப்பு, இந்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வருகிறது.

கங்கா மந்தன்[தொகு]

திட்டத்தினை செயற்படுத்தும் ஒரு அங்கமாக கங்கா மந்தன் எனும் அமைப்பு 7 சூலை 2014 அன்று அமைக்கப்பட்டது. கொள்கை உருவாக்குபவர்கள், செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் அறிஞர்கள், சமய ஞானிகள், சமயத் தலைவர்கள் ஆகியோரை ஒருங்கிணைப்பது இவ்வமைப்பின் பொறுப்பாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]