ககேய்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ககேய்போ (Kakeibo) என்பது ஒரு சப்பானிய சேமிப்பு முறையாகும். [1] "ககேய்போ" என்ற சப்பானிய சொல்லுக்கு "வீட்டு கணக்கு புத்தகம்" என்று பொருளாகும். இந்த சேமிப்பு முறையானது தனிநபர்கள் தங்கள் செலவினப் பழக்கங்களை முறைப்படுத்தவும் சேமிப்பு இலக்குகளை அடையவும் உதவுகிறது. 1904ம் ஆண்டு ஜப்பானிய முதல் பெண் பத்திரிகையாளர் அனி மோத்தோகோ என்பவர் அறிமுகம் செய்தார்.[2] ஜப்பானிய இல்லத்தரசிகள் தங்கள் மாதாந்திர வீட்டுச் செலவுகளை நிர்வகிக்க உதவும் நோக்கத்தோடு இந்த முறையை உருவாக்கினார். [3]

சேமிப்பு முறை[தொகு]

இந்த சேமிப்பு முறையானது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறிய குறிப்பேட்டை எப்போதும் கையில் எடுத்துச் செல்ல வலியுறுத்துகிறது. வாரம் ஒருமுறை ஒவ்வொருவரும் செய்யும் செலவுகளையும் வீட்டில் உள்ள பெரிய குறிப்பேட்டில் எடுத்து எழுத வலியுறுத்துகிறது. இவ்வாறு எழுதுவதன் மூலம் ஒவ்வொரு நபரும் செய்யும் கூடுதல் தேவையற்ற செலவுகளை குறைக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ உதவுகிறது. மேலும் சிக்கனத்தைக் கற்றுக்கொள்ளவும், சேமிக்கவும் உதவுகிறது. [4]

வரலாறு[தொகு]

சப்பானிய பத்திரிகையாளர் அனி மோத்தோகோவால் ககேய்போ உருவாக்கப்பட்டது. 1904 ஆம் ஆண்டில் இவர் பெண்கள் பத்திரிகையில் முதல் ககேய்போவை வெளியிட்டார்.[5]

அடிப்படை கருத்துக்கள்[தொகு]

  • எவ்வளவு வருமானம்?
  • எவ்வளவு சேமிக்க வேண்டும்?
  • எவ்வளவு செலவாகிறது?
  • எப்படி மேம்படுத்துவது?

மேலும், செலவுகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்:

  • அத்தியாவசிய பொருட்கள் (எ.கா. உணவு, உடைகள், வாடகை)
  • அத்தியாவசியமற்ற தேவைகள் (எ.கா. எடுத்துச் செல்லும் உணவுகள்)
  • பண்பாடு (எ.கா. அருங்காட்சியகம், புத்தகங்கள்)
  • எதிர்பார்க்காதது (எ.கா. சுகாதார நியமனம்)

மேற்கோள்கள்[தொகு]

  1. BBC
  2. Jstor
  3. Kalkinline
  4. "Kalkionline". www.kaljionline.com. பார்க்கப்பட்ட நாள் 29 April 2024.
  5. Isak, Christopher (2021-12-16). "Kakeibo: A Guide to Money Management". TechAcute (in அமெரிக்க ஆங்கிலம்). TechAcute. பார்க்கப்பட்ட நாள் 2021-12-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ககேய்போ&oldid=3944750" இலிருந்து மீள்விக்கப்பட்டது