ஓ சி மின் நகரத் தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓ சி மின் நகரத் தொலைக்காட்சி (HTV)
Typeஒலிபரப்பு தொலைக்காட்சி
Countryவியட்நாம்
Availabilityவட்டாரவகை
Headquartersஓ சி மின் நகரம், வியட்நாம்
Launch date
1 மே 1975
Official website
www.htv.com.vn
HTV தலைமையகம், ஓ சி மின் நகரம்

ஓ சி மின் நகரத் தொலைக்காட்சி (Ho Chi Minh City Television) (HTV) வியட்நாமில் உள்ள மிகப்பெரிய வட்டாரத் தொலைக்காட்சி வலைப்பின்னல் ஆகும்

வரலாறு[தொகு]

இது முதலில் சாய்கோனில் 1966 இல் சாய்கோன் தொலைக்காட்சி எனும் பெயரில் இயங்கத் தொடங்கியது. பிறகு, 1975 மே 1 ஆம் நாளன்று ஓ சி மின் நகரத் தொலைக்காட்சி எனப் பெயர் மாற்றம் பெற்றது.

சேவைகளும் செயல்பாடுகளும்[தொகு]

ஓ சி மின் நகரத் தொலைக்காட்சியின் HTV அலுவலகம் கனோய் ந்கரிலும் அமைந்துள்ளது. இது 17 அலைவைசைகளில் நிகழ்ச்சிகளை அமைத்து ஒளிபரப்புகிறது. HTV7 – பொது கேளிக்கை நிகழ்ச்சிகள்; HTV9 – பொதுத் தகவல் அறிக்கை; HTV1 – பொதுத் தகவல்; HTV2 – பொதுக் கேளிக்கை நிகழ்ச்சிகள்; HTV3 – குழந்தை, பதின்பருவ நிகழ்ச்சிகள்; HTV4 - கல்வி; HTVC - திரைப்படம்; HTVC - வியட்நாமியர்; HTVC - இசை; HTVC – பயணமும் வாழ்வும்; HTVC - குடும்பம்; HTVC - மகளிர்; HTV - விளையாட்டுகள்; HTVC – வீட்டுத் தேவை வாங்கல்; HTVC Plus – பொதுத் தகவல்; HTV கூட்டுறவு வீட்டுப்பொருள்கள் வாங்கலும் நிதி, வங்கித் தகவலும். HTV செயற்கைக்கோள், வடம், புவிதரைப் பரப்பல், இணையமுறை ஆகிய பலவகைகளில் ஒளிபரப்புகிறது. DVB-S2, DVB-T2, MPEG-4 HD standard போன்ற உயர்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இதன் துணைநிறுவனமான வடவழி இயக்கக் குழுமம் ஊடகத் தொழில்நுட்பசேவைக் குழுமமாக இயங்குகிறது. இது HTV TMS எனவும் HTVC எனவும் அழைக்கப்படுகிறது. இது 100 க்கும் மேற்பட்ட அயல்நாட்டு உள்நாட்டு அலைவரிசைகளை இயக்குகிறது.

இது பல அயல்நாட்டு வடிவநுட்பங்களை வாங்கி (எடுத்துகாட்டாக, Family Feud, So You Think You Can Dance போன்றவற்றை வாங்கி) ஒளிபரப்புகிறது.[சான்று தேவை] இது தொலைக்காட்சி இதழ் ஒன்றையும் (htv.com.vn) எனும் இணையதளத்தையும் நடத்துகிறது (htv.com.vn).

மேலும் காண்க: ஹோ சி மின் நகர தொலைக்காட்சியில் (எச்.டி.வி) ஒளிபரப்புகளின் பட்டியல்

வெளி இணைப்புகள்[தொகு]