உள்ளடக்கத்துக்குச் செல்

ஓவிய நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓவிய நூல் எனும் பெயரில் ஒரு நூல் இருந்ததை அடியாக்கு நல்லாரின் சிலப்பதிகார உரை கூறுகிறது (வேனிற்காதை அடி 25 உரை). அதில் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்திகள்:

  • நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல் பற்றிய செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.
  • அவற்றுள் திரிதரவு உடையன யானை, தேர், புரவி, பூனை முதலியன.
  • திரிதரவு இல்லவை என்பது வகைப்படும். அவை
பதுமுகம்
உற்கட்டிதம்
ஒப்படி இருக்கை
சம்புடம்
அயமுகம்
கவந்திகம்
தனிப்புடம்
மண்டிலம்
ஏகபாதம்

என்பன. [1]

ஓவிய நூல் பற்றிய செய்தியைப் பெருங்கதை என்னும் நூல் குறிப்பிடுகிறது. ஒண்வினை ஓவியர் கண்ணிய விருத்தி, பாவை நோக்கம் என இது குறிப்பிடுகிறது.

அடியார்க்கு நல்லார் காலத்துக்கு முந்திய 11ஆம் நூற்றாண்டு அந்த நூலின் காலம் எனலாம்.

கருதவேண்டியவை

[தொகு]
  • ஓவச்செய்தி [2]
  • ஓவ மாக்கள் [3]
  • ஓவம் [4]

கருவிநூல்

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. இவற்றை உணர்த்தும் பாடல் ஒன்றையும் இவர் நேற்கோளாகத் தந்துள்ளார்.
  2. அகநானூறு 5-20
  3. நற்றிணை 118-7
  4. பட்டினப்பாலை 49 முதலானவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓவிய_நூல்&oldid=1241082" இலிருந்து மீள்விக்கப்பட்டது