ஓமைரா சஞ்சேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓமைரா சஞ்சேஸ்
Omayra Sánchez Garzón Edit on Wikidata
பிறப்பு28 ஆகத்து 1972
Armero
இறப்பு16 நவம்பர் 1985 (அகவை 13)
Armero

ஒமைரா சஞ்சேஸ் (Omayra Sánchez Garzón, ஆகத்து 28,1972-நவம்பர் 16,1985) என்பவர் 1985 இல் கொலம்பியா ஆர்மிரோவில் ஏற்பட்ட எரிமலை விபத்தில் இறந்து போன பதின்முன்று அகவை சிறுமி ஆவாள்.[1]

நேவடோ டெல்  ரூயிஸ் என்ற எரிமலையில் 23000 பேர் மாண்டு போனார்கள். இந்த எரிமலையினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கிடையே சேறும் சகதியும் தண்ணிரும் நிறைந்த அவலச் சூழ்நிலையில், உற்றார் உறவினர்களின் பிணங்களுக்கிடையே மூன்று நாள்கள் சிக்கித் தவித்த பெண் ஓமைரா சஞ்சேஸ் ஆவார்.

உயிர் இழக்கும் தறுவாயிலும் கடைசி நிமிடம் வரை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இருந்ததாக நேரில் பார்த்த மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களும் பத்திரிகையாளர்களும் கூறினார்கள். இதிலிருந்து மீண்டு பள்ளிக்குப் போய் தேர்வுகள் எழுதி வெற்றி பெறுவதாகவும் நம்பிக்கை இழக்காமல் பேசினாள் ஓமைரா சஞ்செஸ்.

பிராங்க் போர்னியர் என்ற நிழற்படக்காரர் அந்த துன்பச் சூழலில் அப்பெண்ணைப் படம் பிடித்து அவள் இறந்து சில மாதங்கள் கழித்து பத்திரிகைகளில் வெளியிட்டார். அந்த நிழற்படம் 1986 இல் உலகில் சிறந்த நிழற் படம் எனக் கருதப்பட்டது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமைரா_சஞ்சேஸ்&oldid=3860168" இலிருந்து மீள்விக்கப்பட்டது