ஓட்டம் (சடங்கு விளையாட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓட்டம் என்பது ஒரு தமிழர் சடங்கு விளையாட்டு.

திருமணமான புதிதில் ஆடி மாதத்தில் பெண்ணைத் தாய் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுவார்கள். ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரைக் கத்திரி வெயிலில் குழந்தைப்பேறு நிகழ்ந்து இன்னலுற வேண்டியிருக்கும் என எண்ணி இந்த வழக்கத்தைத் தமிழர் கடைப்பிடித்துவந்தனர். திருமணமானவன் ஆடிமாத இறுதியில் தன் மனைவி இருக்கும் வீட்டுக்கு வந்து தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போவான். இதனைத் தடுப்பது போலவோ, அல்லது அவர்களை முடுக்குவது போலவோ பெற்றோரும் மற்றோரும் அவர்களைத் துரத்திச் செல்வர். இதனை ஓட்டம் என்பர்.

தமிழ்நாட்டுப் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழும் கள்ளர், மறவர் இனத்தவர் இந்தச் சடங்கு விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்.

பார்க்க[தொகு]

தமிழர் விளையாட்டுகள் (அண்மைய காலம்)


கருவிநூல்[தொகு]

  • பாலசுப்பிரமணியம், இரா, தமிழர் நாட்டு-விளையாட்டுகள், 1980