ஒழுங்கற்ற மரியாத் திட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமைதி கடற்பகுதியில் உள்ள ஒழுங்கற்ற மரியாத் திட்டு. படம் ஆழமாக தலைகீழாகத் தோன்றலாம் என்பதைக் கவனியுங்கள். மேல் வலது மூலையில் உள்ள பெரிய வட்டப் பொருள் ஒரு குழிப்பள்ளம். மையத்தில் உள்ள பெரிய வட்டவடிவப் பொருள் ஒரு கும்மட்டம்.
மேற்கு அமைதிக் கடற்பகுதியில் உள்ள ரீமா சோசிஜென்சைக் கடக்கும் ஒழுங்கற்ற மரியாத் திட்டு

ஒழுங்கற்ற மரியாத் திட்டு (irregular mare patch) (IMP) என்பது வழ்க்கமாக நிலாவின் மரியாப் பகுதியில் உருவாகும் ஒரு வழவழப்பான, வட்டமான, சற்று குன்றுபோன்ற கிட்டதட்ட 500 மீட்டர் அகலம் உள்ள பகுதியாகும். [1]

கண்டுபிடிப்பு[தொகு]

இவற்றின் சிறிய அளவாலும் புவியிலிருந்தான நோக்கீட்டு வானியல் சார்ந்த சிக்கல் காரணமாகவும் , இனா எனும் முதல் ஒழுங்கற்ற மரியாத் திட்டு 1971 ஆம் ஆண்டில் அப்பல்லோ 15 எடுத்த புகைப்படங்களைப் பகுப்பாய்வு செய்த பிறகு மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட அப்பல்லோ 15[2] இன் நிலாப் புலனாய்வு சுற்றுகலன் மேலும் 70 நிலா மரியாத் திட்டுகளைக் கண்டுபிடித்தது.

தோற்றம்[தொகு]

ஒழுங்கற்ற மரியாத் திட்டுகளின் தோற்றம் உறுதியற்றது. ஒரு பகுதியின்அகவை அதன் மீது உள்ள பள்ளங்களின் எண்ணிக்கையால் அறுதியிடப்படுவதால், இந்தப் பகுதி குழிப்பள்ளங்கள் எண்ணிக்கையை வைத்து இந்த பகுதிகள் சில பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்பதை அறியலாம். குழிப்பள்ளங்களின் எண்ணிக்கை பிற அனற்குழம்புப் பாய்வுகளுடன் அவற்றின் நிறமாலை ஒற்றுமை காரணமாக அவை சிறிய எரிமலை அனற்குழம்புப் பாய்வுகள் என்று நிலாப் புலனாய்வு சுற்றுகலன் குழுவால் கருதப்பட்டுள்ளது.[3] இருப்பினும் , மற்ற ஆய்வாளர்கள் இதை மறுக்கின்றனர் , ஒரு பெரிய திட்டுக்குப் பதிலாக பல தனித்தனி திட்டுகள் உள்ளன என்று குறிப்பிடுகின்றனர். இதற்கு ஏராளமான சிறிய அளவிலானெரிமலை உமிழ்வுகள் தேவைப்படும். நிலாவில் ஏற்படும் பிற உமிழ்வுகளில் அனற்குழம்பு பாய்வதற்கான அறிகுறியும் இல்லை. இன்னும் முதன்மையான தகவல் என்னவென்றால் , எரிமலலுமிழ்வு நடவடிக்கை பற்றிய கருதுகோள் , நிலாப் புவியியலின் தற்போதைய கோட்பாட்டுடன் முரண்படுகிறது , இது நிலா சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குளிர்ந்து திண்மப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது.[1]

புவியியல் தாக்கங்கள்[தொகு]

ஒழுங்கற்ற மரியாத் திட்டுகளைப் புரிந்துகொள்வதற்கு புதிய புவியியல் கோட்பாடுகள் சரியாக விளக்கப்பட வேண்டும்.தற்போதைய அறிவியல் கோட்பாடுகளின்படி , நிலாவின் சிறிய அளவு என்பது அதன் கவசம் சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முழுமையாக திண்மப்ப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும். இந்தப் புறணி நிலா உட்புறத்தின் மீதும் புவியியல் நடவடிக்கையைத் தடுக்கும்.[4] அண்மைய (புவியியல் அடிப்படையில்) உமிழ்வு , நிலாவில் உள்ள கதிரியக்க ஓரகத்திகளின் கதிரியக்க சிதைவிலிருந்து வெளியிடப்பட்ட வெப்பம் காரணமாக இருக்கலாம் என்பதையும் நினைத்ததை விட நிலா மிகவும் மெதுவாக குளிர்ந்துள்ளது என்பதையும் குறிக்கிறது.[5]

மேலும் காண்க[தொகு]

நூல்தொகை[தொகு]

  • John Moore: Irregular Mare Patches on the Moon (2019).

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Wood, Charles. "Strange Little IMPs." Sky and Telescope, February 2015 issue.
  2. Ewen Whitaker (1972). "An unusual mare feature". Apollo 15 Preliminary Science Report (NASA Special Publication 289). பக். 25-84–25-85. http://wvaughan.org/ina/whitaker-1972.pdf. பார்த்த நாள்: 2015-01-03. 
  3. Brown, Dwayne (12 October 2014). "Nasa mission finds widespread evidence of young lunar volcanism". www.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  4. Freudenrich, Craig (6 March 2008). "Geologic History of the Moon". howstuffworks.com. பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  5. Robinson, Mark (12 October 2014). "New Evidence For Young Lunar Volcanism". Arizona State University. பார்க்கப்பட்ட நாள் 4 January 2015.