ஒழுகிசை (செய்யுள்)
Appearance
ஒழுகிசை என்பது செய்யுட்களைச் சொற்களால் அல்லது பொருளால் மோனை முதலான தொடைகள் அமைத்து கேட்போருக்கு இன்பம் தரும் வகையில் அமைக்கும் செய்யுளின் ஓசையாகும். வெறுக்கத்தக்க இனிமையல்லாத இசைபோலன்றி, நீரொழுக்குப் போல தங்கு தடையின்றிச் செல்லும் ஓசையால் தொடுக்கப்படுவது 'ஒழுகிசை' எனப்படும்.
- இமையவர்கள் மௌலி இணைமலர்த்தாள் சூடச்
- சமையந் தொறுநின்ற தையல் - இமைய
- மலைமடந்தை வாச மலர்மடந்தை எண்ணெண்
- கலை மடந்தை நாவலோர் கண்.
இச்செய்யுளில் , மலை மடந்தை வாச மலர்மடந்தை எண்ணெண் கலை மடந்தை' என்ற பகுதியைப் படிக்கும்போது உண்டாகும் ஓசை வெறுப்பின்றி நீரொழுக்குப் போல் ஒழுகுவதால் இது ஒழுகிசையாயிற்று.
மேற்கோள்
[தொகு]தா.ம. வெள்ளைவாரணம், தண்டியலங்காரம். திருப்பனந்தாள் மட வெளியீடு.1968