உள்ளடக்கத்துக்குச் செல்

ஒளிவலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளியாற் பகுப்பு வலி (hotolytic pain) என்பது கதிரொளியாலோ செயற்கை ஒளியாலோ தோலில் ஓளிய்யற்பகுப்பு ஏற்படுத்தும் அழற்சியும் வலியும் ஆகும். புற ஊதாக் கதிரையும் கட்புலன் ஒளியையும் உள்ளடக்கிய ஒளியின் அலைநீளம் 250 - 800 nm ஆக இருக்கும் போது, கதிரொளியில் வேண்டா விளைவுகள் தோன்றலாம். ஏனெனில் இந்த நெடுக்கத்தில் தோலில் உள்ள மெலொனின் ஒளியை எதிரொளிக்கவும் உள்ளேற்கவும் சிதறடிக்கவும் செய்யும். குழந்தைகளிலகேற்படும் மீக்கதிர்த் தீப்புண்ணின் எதிர்வினை தான் வலியை உண்டாக்குவதில் குறிப்பிடத்தக்கது. 290 - 320 nm நெடுக்கத்திலும் ஒளிக்கதிர்கள் எதிர்வினையை உண்டாக்குகின்றனமப்போது தோல் அழற்சியும் எதிர்வினைகளும் உண்டாகலாம். கதிரொளியால் வரும் தோல் எதிர்வினைகள், கதிரொளித் தீப்புண் மருந்துகளால் உண்டாகும் வலியுடன் கூடிய அழற்சி, தோல் அழற்சி, தோலின் கடினத்தன்மை ஆகியன தரும், பார்ஃபைரியாக்கள், லைக்கன்பிளேன்சு, சார்க்காய்டு போன்றவையும் உருவாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. அறிவியல் களஞ்சியம் - தொகுதி 6 - தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடு - 63-6 - திசம்பர் 1998 - பக். 803
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிவலி&oldid=3726212" இலிருந்து மீள்விக்கப்பட்டது