ஒலி சமிக்ஞை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒலி சமிக்ஞை (Audio signal) என்பது ஒலியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மின்அழுத்த வடிவமாகும். ஒலி சமிக்ஞைகளின் மீடிறனானது 20 – 20000 Hz வரையிலான மீடிறனில் (மனித கேள்தகமை வீச்சு) காணப்படுகிறது. சமிக்ஞைகள் நேரடியாகத் தொகுக்கபடுவனவாகவோ அல்லது ஆற்றல் மாற்றிகளான நுண்பன்னி இசைகருவிடம், போனோகிராப்(ஒலிபதிப்புக் கருவி), காட்டிரிச், ஒலிபெருக்கி, செவிப்பன்னி என்பவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படுவனவாகவோ காணப்படலாம். இவை இலத்திரனியல் ஒலிசமிக்ஞையை ஒலி வடிவத்திற்கு மாற்றீட்டு செய்கின்றன.

ஒலிச்சமிக்ஞைகளின் இலத்திரனியல் பிரதிநிதித்துவங்கள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படலாம். ஒலித்திடமானது(ஆடியோ சேனல்), ஒரு ஒலிசமிக்ஞைகான தொடர்பால் ஊடகமாக சேமிப்பு கருவிகளில் தொழில்பட்டு மல்ரி டிராக் பதிவுகளிற்கும், ஒலி வலுவூட்டலிற்கும் உதவுகின்றது.

சமிக்ஞை நகர்வு[தொகு]

சமிக்ஞை நகர்வானது ஒலி சமிக்ஞைகளின் மூலக்கருவியான நுண்பன்னியில் இருந்து ஒலிபெருக்கியை நோக்கியதாகவோ அல்லது ஒலிப்பதிவு செய்யும் கருவியை நோக்கியதாகவோ அமையலாம். இச்செயற்பாடானது பொதுவாக ஒலிப்பதிப்பு செய்யும் ஸ்ரூடியோகளிலேயே நடத்தப்படுகிறது. அங்கு இச்சமிஞ்சை நகர்வானது நீண்ட அலை வடிவம் கொண்ட மின்சமிஞ்ஞைகளாக தொடர்முறைப் பணியகம், வெளிவாரி ஒலியமைவு உபகரணங்கள் மற்றும் வேறு அறைகள் போன்ற பல பகுதிகளினூடாக கடத்தப்படுகின்றது.

அளவுருக்கள்[தொகு]

ஒலிச்சமிக்ஞையானது அளவுருக.களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. கற்றை அகலம் ,வலு , டெசிபெல் மட்டம் என்பன அவ்வுருக்களாக காணப்படுகிறன. வலுவிற்கும் அழுத்ததிற்குமான தொடர்பு சமிக்ஞை பாதையின் மின்மறுப்பில் தங்கியிருக்கின்றது. 

ஒலிச்சமிக்ஞை பாதையானது ஒற்றை முடிவுடைய பாதையாகவோ அல்லது சமனிலைப்படுத்தப்பட்ட பாதையாகவோ காணப்படலாம். ஒலிச்சமிக்ஞை அதனது பிரயோகங்களின் அடிப்படையில் தரப்படுத்தப்படுகின்றன. நுண்பன்னிகளின் வெளியீடு, குறைவான தரத்திலும் (மைக் லெவல்) தொழில்சார் கலப்பு பணியகத்தின் வெளியீடு "லைன்" மட்டத்திலும் காணப்படும். நுகர்வோர் ஒலிச்சமிக்ஞை உபகரணங்கள் வெளியீடு குறைவான தரத்திலும் காணப்படும்.

எண்முறைச்சீராக்கல்[தொகு]

ஒலிச்செருகுநிலைகளின் விருத்திக்கு பின்னர், எண்முறை தகவல்களில் பாதையானது எண்முறை ஒலித்தளங்களினுடாகவே பரிமாற்றப்படுகின்றது. இச்செயன்முறையும் சமிக்ஞை பாதை என அழைக்கப்படும்.

எண்முறை ஒலிச் சமிக்ஞையானது, பார்வைக்குரிய (ஒப்ரிக்கல்), இணையச்சு, எக்ஸ்.எல்.ஆர் (ஏஇஎஸ் / இபியு), மற்றும் ஈத்தர்நெட் உள்ளிட்ட பல வடிவங்களில் வடங்களுக்கு ஊடாக கடத்தப்படுகின்றன.

இவற்றையும் காண்க[தொகு]

சான்றாதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலி_சமிக்ஞை&oldid=2747616" இலிருந்து மீள்விக்கப்பட்டது