ஒலிம்பியா மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிம்பியா மையம்

ஒலிம்பியா மையம் (Olympia Centre) என்பது சிக்காகோ நகரில் உள்ள ஒரு உயரமான கட்டிடமாகும். இக்கட்டிடத்தின் குறுகலான மேல் பகுதியில் குடியிருப்புகளும் கீழ்ப் பகுதியில் அலுவலகங்கள் செயல்படுகின்ற வகையிலும் கட்டப்பட்ட ஒரு கலப்பு பயன்பாட்டுக் கட்டிடமாக இருக்கிறது. சிகீட்மோர், ஓவிங்சு மற்றும் மெர்ரில் எல்.எல்.பி நிறுவனம் வடிவமைத்து கட்டியுள்ள இக்கட்டிடம் 63 மாடிகள் கொண்ட 725 அடி உயரக் கட்டிடமாகவும், சிகாகோ நகரத்தின் மிக உயரமான கட்டிடமாகவும் நகரின் நடுவில் உயர்ந்து நிற்கிறது. கட்டிடத்தின் வெளிப்புறம் இத்தாலியில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுவீடியக் கருங்கற்கள் அழகாகப் பதியப்பட்டுள்ளது.[1] 1981 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கட்டுமானம் 1986 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இக்கட்டிடத்தின் பெயரான ஒலிம்பியா மையம், அசலாக இக்கட்டிடத்தின் வடிவமைப்பாளரான ரொறன்ரோ நகரத்தைச் சார்ந்த ஒலிம்பியா மற்றும் யார்க்குடன் தொடர்பு கொண்டுள்ளது.

நெய்மான் மார்கசுவால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள ஒரு சில்லறை வணிகப் பிரிவு, 6 ஆவது மாடி முதல் 23 ஆவது மாடி வரையில் வர்த்தக வணிகப் பிரிவு மற்றும் 24 வது மாடி முதல் 63 ஆவது மாடிவரை தனியர்களுக்கான குடியிருப்புப் பகுதிகள் என ஒலிம்பியா மையம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வெய்சுபுளூத் குழந்தை மருத்துவமனை ஒலிம்பியா மையத்தின் அறைத்தொகுதி[1] எண் 820 இல் அமைந்துள்ளது. சிகாகோ நகரில் இம்மருத்துவமனை மட்டுமே அழைப்பவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவம் பார்க்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறது. சிகாகோவின் சப்பானியத் தூதரகம் அறைத் தொகுதி எண் 1100 இல் அமைந்துள்ளது.[2][3]


மேற்கோள்கள்[தொகு]

  1. Weissbluthpediatrics.com
  2. "Home Page". Consulate-General of Japan in Chicago. பார்க்கப்பட்ட நாள் January 31, 2009.
  3. "Contact, Hours, & Directions." Consulate-General of Japan in Chicago. Retrieved on March 7, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பியா_மையம்&oldid=1991927" இலிருந்து மீள்விக்கப்பட்டது