ஒலிநூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒலிநூல் என்பது அச்சிடப்பட்ட ஒரு நூலை வாசித்து குரல்பதிவு செய்து வெளியிடப்படும் ஒலிப்பதிவு அல்லது எழுத்துருவம் பெற்றிடாத கதைகளைச் சொல்லி குரல்பதிவு செய்து வெளியிடப்படும் ஒலிப்பதிவு என்று பொருள்படும். தற்போதைய காலக்கட்டத்தில் ஒலிநூல் ஒரு பிரபலமான நூல் வடிவமாகக் கருதப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

ஒரு ஒலிப்பதிவகத்தில் எழுத்துருவில் இருக்கும் கதையை வாசித்து பதிவு செய்தோ அல்லது பல்வேறு குரல் கலைஞர்களைக் கொண்டு அவர்களை இயக்குவதன் மூலம் குரல்வழி நாடகம் இயற்றி பதிவு செய்தோ ஒலிநூல்கள் தயாரிக்கப்படுகின்றன.[1]

ஒலிப்பதிவக பொறியாளர், குரல்வழி இயக்குநர், கதைச்சொல்லி ஆகியோர் ஒலிநூல் தயாரிப்பில் முக்கிய பங்கு வகுக்கிறார்கள். சிலமுறைகளில் இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் கூட ஒலிநூல் தயாரிப்பில் அங்கம் வகிப்பர்.[2]

தற்போதைய நவின தொழில்நுட்பத்தைக் கொண்டு பலர் தங்கள் இல்லங்களிலேயே குரல்பதிவு செய்து ஒலிநூல்கள் வெளியிடுகின்றனர். தொழில்நிமித்த ஒலிபதிவகங்களில் தயாரிக்கப்படும் ஒலிநூல்கள் பதிவு செய்தமைக்கு பிறகு, தொகுக்கப்பட்டு பிழைத்திருத்தமும் செய்யப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "ஒலிநூல் தயாரிப்பு - ஒரு மேற்பார்வை (ஆங்கிலம்)".
  2. "ஒலிநூல் வளங்கள் - ஆடியோ பப்ளிஷர்ஸ் அசோஷியேஷன் (ஆங்கிலம்)". Archived from the original on 2014-10-28. 2021-02-24 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிநூல்&oldid=3485354" இருந்து மீள்விக்கப்பட்டது