ஒற்றைப் புகுபதிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒற்றைப் புகுபதிகை (Single sign-on - SSO) என்பது கணனியில் இயங்கும் பல்வேறு செயலிகளை (programs) கணனியில் ஒருமுறை புகுபதிகை செய்வதன் முலம் பயன்படுத்தும் ஓர் முறையாகும். இதன் மூலம் ஒரு பயனர் ஒவ்வொரு முறையும் தனது கணனியில் உள்ள செயலிகளை லாக்-ஆன் செய்வது தவிர்க்கப்படுகின்றது. இம்முறையில் ஒரு பயனர் தனது கணனியை விடுபதிகை செய்வதன் முலம் அனைத்து செயலிகளையும் விடுபதிகை செய்யமுடியும். இம்முறையில் பயனரின் நேரம் மிச்சப்படுவதுடன் வெவ்வேறு செயலிகளுக்கு பலதரப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு பயனர் தனது கணனியில் புகுபதிகை செய்வதன் மூலம் மின் அஞ்சல் செயலியை புகுபதிகை செய்யாமலேயே பயன் படுத்தமுடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒற்றைப்_புகுபதிகை&oldid=1367656" இருந்து மீள்விக்கப்பட்டது