ஒற்றைச் சாளர சேர்க்கை முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு ஒற்றைச் சாளர சேர்க்கை முறைமை (Single Window Admissions System) பயன்படுத்தப்படுகிறது. [1] [2] இது அண்ணா பல்கலைக்கழகக் கலந்தாய்வு என்று பரவலாக அறியப்படுகிறது. 12 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்து சேர்க்கை பெறுவதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாகும்.

இந்த முறையின் சிறப்பம்சம் மாணவர்களுக்கு தரவரிசை தயாரிக்கப்படுகிறது. ஒரு மாணவர் கலந்தாய்வில் கலந்து கொள்ளும்பட்சத்தில் அவருக்கு ஒரு கல்லூரியில் பாடப் பிரிவினை ஒதுக்கீடு செய்யாமல் தரவரிசையில் உள்ள அடுத்தவருக்கு பாடப் பிரிவினை ஒதுக்கீடு செய்ய இயலாது. எனவே அனைத்து மாணவர்களும் தரவரிசை அடிப்படையில் சேர்க்கப்படுவதை உறுதி செய்கிறது.

செயல்முறை[தொகு]

மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் தரப்படுத்தப்படுகிறார்கள். இந்த மதிப்பெண், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில், கணிதம் (100), இயற்பியல் (50), வேதியியல் (50) மதிப்பெண்களின் சராசரிக் கலவையாகும். ஒரு மாணவரின் மதிப்பெண் அவர்களின் தர வரிசையினைத் தீர்மானிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வி இயக்குநரகத்தால், மாணவர்களின் தரவரிசைக்கு ஏற்ப பொறியியல் சேர்க்கைக்கு மாணவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் சூன் மற்றும் சூலை மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும். மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்த கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.

சான்றுகள்[தொகு]

  1. "Tamil Nadu Engineering Admission: Case for single-window". Inmathi (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-05-24. பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.
  2. "TN govt defends single-window system for engineering admissions". Hindustan Times (in ஆங்கிலம்). 2017-07-20. பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.